6 ஜூன், 2010

இமிக்ரேசன் அனுபவங்கள்...பான் கார்டு...

நான் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பொதுவாகவே எரிச்சலான பயணங்கள் விமானப் பயணங்கள்தான்.. முதன் முறை போகும்போது மட்டுமே நமக்கு ஆர்வமாக இருக்கும்.. அதுவும் இப்போதிருக்கும் பட்ஜெட் விமானங்கள் காசு மட்டுமே மிச்சம் பிடிக்க உதவும், மற்றபடி நம்ம ஊரில் ஆம்னி பஸ்சுக்கும், கார்பரேசன் பஸ்சுக்கும் உள்ள வித்தியாசம்தான்.. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் விமானப் பயணத்தைக் காட்டிலும் சுவாரஸ்யமானது.

பொதுவாகவே ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையில் இருக்கும் தரைவழி இணைப்புகள் சற்று பரபரப்பாகவே இருக்கும்.. கண்காணிப்பு அதிகம் தேவைப்படும் இடம் என்பதால் எல்லோரையும் திருடனைபோல்தான் விசாரிப்பார்கள்.. காரணம் இரு நாட்டிருக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளி. ஏன் நம்ம ஊர் காரைக்காலையே எடுத்துக் கொண்டால் அதன் பார்டர் ஊரான வாஞ்சியூரில் நம்ம ஆளுங்க சரக்கடிக்க போவதில்லையா அது மாதிரிதான்.

அமெரிக்காவில் மெக்சிகோ பார்டர், ஆப்பிரிக்க நாடுகளின் பார்டர், சிங்கப்பூர் - மலேசியா மற்றும் இந்தோனேசியா பார்டர், மலேசியா- தாய்லாந்து பார்டர், இந்திய- பக்கத்து நாடுகளின் பார்டர் போன்றவை பிரிசித்தி பெற்றவை.

நான் சிங்கப்பூரில் இருந்தால் அடிக்கடி மலேசியாவின் ஜோஹூர் பாருவுக்கு செல்வேன் அங்கு எல்லாமே சிங்கப்பூரின் விலைகளைவிட பாதி விலையில் கிடைக்கும். என் நண்பர் இரு நாட்களுக்கு ஒருமுறை காய்கறி உட்பட அங்கு சென்றுதான் வாங்குவார். அவர் பார்டர் வூட்லாண்ட்ஸ் ஏரியா அதனால் தேக்கா என்று அழைக்கபடும் குட்டி இந்தியாவுக்கு சென்று வருவதை விட இது மிகப் பக்கம்.

நம் ஊர்க் காரர்கள் சிங்கப்பூரில் விசிட் விசாவிலேயே சென்று வியாபாரம் பார்ப்பார்கள், முன்பெல்லாம் இப்பொது மாதிரி ஒரு மாத தங்கும் விசா தரமாட்டார்கள். குத்து மதிப்பாக குடுப்பார்கள், பொதுவாக பதினான்கு நாட்கள், ஆனால் நம்ம ஆட்கள் செய்த நிறைய தவறுகளால் ஒரு நாள் தங்கும் விசா கூட கொடுப்பார்கள். 

இதுக்கெலாம் நம்ம ஆட்கள் சளைத்தவர்களா மலேசியா சென்று மீண்டும்  சிங்கப்பூர் வந்து நிறைய டகால்டி வேலைகள் பார்ப்பார்கள். ஆனால் மலேசியாவில் எல்லோருக்கும் ஒரு மாத தங்கும் விசாதான். அங்கு உள்ள குடி நுழைவு அதிகாரிகள் அனைவரும் லஞ்சம் வாங்குவார்கள், அவர்களுக்கு நம்ம  ஆட்கள் நிறைய கொடுத்து பழக்கி விட்டனர், அதனால் அவர்களும் யாராக இருந்தாலும் கோப்பி மணி ( காபி குடிக்க காசு ) கேட்பார்கள், சிங்கப்பூர் காரர்கள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆட்களிடம் கேட்க மாட்டார்கள்.

நான் பெரும்பாலும் இரண்டு நாளைக்கு ஒரு முறை அங்கு செல்வேன், என் பாஸ்போர்ட்டை பார்ப்பவர்கள் என்னிடம் எதிர்பார்க்க  மாட்டார்கள். காரணம் விசா ஸ்டாம்பிங் அடிக்க இடமே இருக்காது. அதனால் அடிக்கடி வருபவன் எதுவும் தேறாது என வெறுப்பாக விட்டுவிடுவார்கள். இப்படியாக ஒரு நாள் நான் போகும்போது ஒரு புது ஆபிசர் என்னை கடுமையாக விசாரிக்கிறான். என்னைப் பொறுத்தவரை அவர்களை காமெடி பீசாகதான் பார்ப்பேன் என்பதால், சிரித்துக்  கொண்டே ஏடாகூடமாக பதில் சொல்வேன்.

கடைசியில் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு என்று கேட்டான், நான் வெறும் ஐம்பது மலேசியா ரிங்கிட்டுகள் மட்டுமே இருக்கு, மேற்க் கொண்டு எதுவும் தேவை என்றால் என கடன் அட்டைகளை பயன் படுத்திக் கொள்வேன் என்றேன். அவனோ உனக்கு நான் விசா தர முடியாது நீ பெரிய ஆபிசரை பாரு என்று சொல்லி அங்கு அனுப்பி வைத்தான்.

அங்கு சென்றதும் அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் உன் கடன் அட்டைகளைக் காட்டு என்றார். என கடன் அட்டைகளுடன் பான் கார்டும் இருந்தது, முதலில் அதனைப் பார்த்த ஆபிசர் உடனே எழுந்து எனக்கு கை கொடுத்து விட்டு சாரி சார், நீங்க இந்திய அரசாங்கத்தில் வேலை செய்பவர் என முன்னமே சொல்லியிருக்கலாமே என வருத்தப் பட்டு உடனடியாக அவரே விசா அடித்து அனுப்பி வைத்தார். எனக்கு முதலில் குழப்பமாக இருந்தாலும் வெளியில் வந்து என் பான் கார்டை மீண்டும் பார்த்தபோது நம் இந்திய அரசை நினைத்து சிரிச்சு மாளலை.

நீங்களும் சிரிக்கனுன்னா ஒரு முறை உங்க பான் கார்டை பாருங்க...

35 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஹையோ......... ஹையோ ............

துளசி கோபால் சொன்னது…

பான் கார்டுலே பாப்பா!!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பார்த்தேன் ஆனா சிரிக்கிற மாதிரி ஒண்ணுமில்லை. நீங்க நம்ம போட்டோ வை சொன்னீங்களோ?

Ahamed irshad சொன்னது…

:))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

vinthaimanithan சொன்னது…

//நம்ம ஊர் காரைக்காலையே எடுத்துக் கொண்டால் அதன் பார்டர் ஊரான வாஞ்சியூரில் நம்ம ஆளுங்க சரக்கடிக்க போவதில்லையா அது மாதிரிதான்//

நைஸ் எக்ஸாம்பிள்!!! ஆமா பான்கார்டுல இருக்குற பாப்பா யாரு? ஒருவேளை பான்கார்டுலயே அட்டு போட ஆரம்பிச்சிட்டீங்களா???!!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இந்த டெக்னிக் நல்லா இருக்கே :)

சௌந்தர் சொன்னது…

ஹா ஹா ஹா...

Unknown சொன்னது…

நன்றி..

கலாநேசன்

துளசி கோபால்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

அஹமது இர்ஷாத்

T.V.ராதாகிருஷ்ணன்

விந்தைமனிதன்

அக்பர்

soundar

vinthaimanithan சொன்னது…

நன்றி சொன்னால்லாம் பத்தாது... கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கோணும்

Unknown சொன்னது…

///நைஸ் எக்ஸாம்பிள்!!! ஆமா பான்கார்டுல இருக்குற பாப்பா யாரு? ஒருவேளை பான்கார்டுலயே அட்டு போட ஆரம்பிச்சிட்டீங்களா???!!!//
அது உணமையான கார்டுதான்.. குழந்தைகள் பெயரில் பங்குகள் வாங்க அவர்களுக்கும் கட்டாயம் பான் கார்ட் தேவைப்படும்.. அந்த இமேஜ் கூகுள் தந்தது...

vinthaimanithan சொன்னது…

//குழந்தைகள் பெயரில் பங்குகள் வாங்க அவர்களுக்கும் கட்டாயம் பான் கார்ட் தேவைப்படும்.. // நல்ல கூத்து!!! கவர்மெண்ட்ன்னாலே கோமாளித்தனம் நிறைய இருக்கும்போல!

Unknown சொன்னது…

//கவர்மெண்ட்ன்னாலே கோமாளித்தனம் நிறைய இருக்கும்போல!//

நிச்சயமாய் உண்மை.. குழந்தைகள் பெயரில் பங்கு வர்த்தகம் நடைபெறுவது ஆரோக்கியமான செயல் இல்லை..

வருமான வரி ஏய்க்க செய்யும் தில்லாலங்கடி வேளைகளில் இதுவும் ஒன்று ..



நன்றி விந்தை மனிதன்

சரவணகுமரன் சொன்னது…

:-)

என் நண்பன் போஸ்ட் ஆபிஸில் கொடுக்கும் அடையாள அட்டையை வாங்கி வைத்திருக்கிறான். யாரிடம் காட்டினாலும், போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்வதாக நினைத்துக்கொள்கிறார்கள்.

ஜெட்லி... சொன்னது…

//ஜோஹூர் பாருவுக்கு //

இந்த பாரில் ஹாப்பி ஹவர்ஸ் உண்டா...??

:))

Asiya Omar சொன்னது…

நல்ல ஜோக்,நல்ல பகிர்வு.

Unknown சொன்னது…

நன்றி...

Robin

Unknown சொன்னது…

//என் நண்பன் போஸ்ட் ஆபிஸில் கொடுக்கும் அடையாள அட்டையை வாங்கி வைத்திருக்கிறான். யாரிடம் காட்டினாலும், போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்வதாக நினைத்துக்கொள்கிறார்கள்.//

இங்கேயுமா..?

நன்றி சரவணகுமாரன்

Unknown சொன்னது…

//இந்த பாரில் ஹாப்பி ஹவர்ஸ் உண்டா...??//

அந்த ஏரியாவுக்கு சென்றாலே எங்களுக்கு ஹாபி ஹவர்ஸ்தான்..

கள் கிடைக்கும் மேலும் சிங்கப்பூரில் விற்கும் அதே பியர் இங்கு சிங்கப்பூர் விலைக்கு பாதிதான் மேலும் சாப்பாடு, சினிமா என ..

அங்கு போனால் உலச உலகம் எனக்கே சொந்தம் தையட.. தையட.. தைய்யக்கா...

நன்றி ஜெட்லி ..

Unknown சொன்னது…

நன்றி..

asiya omar

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

லொல்லு...

தகவல்கள் சுவாரஸ்யம்...

Unknown சொன்னது…

//லொல்லு...

தகவல்கள் சுவாரஸ்யம்...//

வாங்க மாப்புள ...

ஜோதிஜி சொன்னது…

சிங்கப்பூரில் இருந்து பாலம் வழியாக மலேசியா வந்த போது நன்றாக விபரம் தெரிந்தவர்களுக்கு மலேசியா குடியுரிமை அதிகாரிகளை காமெடி பீசாகத் தான் பார்ப்பார்கள். அனுபவம் உண்டு. துளசி கோபால் சொன்ன தலைப்பு பொருத்தமானதே? படம் ரொம்ப நல்லாயிருக்கு.

ஜானகிராமன் சொன்னது…

காமெடிஆபிஸர்ஸ் நம்ம நாட்ல மட்டுமில்லாம உலகம் பூரா இருப்பாங்க போல. இதுலகூட நாம பஸ்ட் இல்லையா..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

:)

ஜெய்லானி சொன்னது…

:-))

தமிழ்போராளி சொன்னது…

நல்ல ஒரு அனுபவம்தான் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான்... பகிர்வுக்கு நன்றி தோழரே

Unknown சொன்னது…

நன்றி...

ஜோதிஜி

ஜானகிராமன்

ச.செந்தில்வேலன்

ஜெய்லானி

விடுத‌லைவீரா

நேசமித்ரன் சொன்னது…

அரசாங்கத்தின் அவல நிலை இது போல் சகலத்துறைகளிலும் மலிந்து கிடக்கிறது செந்தில் சார்

:(

ஹேமா சொன்னது…

பதிவை விட படத்தைத்தான் மிகவும் ரசித்தேன்.
ஒருவருடத்தின் முன்"புதியவன்"எனும் பெயரில் ஒரு பதிவர் இட்ட படம் இது.நானும்கூட இப்படத்துக்குக் கவிதை ஒன்று எழுதி வைத்திருக்கிறேன் !

Unknown சொன்னது…

நன்றி...

நேசமித்ரன் சார்..

Unknown சொன்னது…

//பதிவை விட படத்தைத்தான் மிகவும் ரசித்தேன்.
ஒருவருடத்தின் முன்"புதியவன்"எனும் பெயரில் ஒரு பதிவர் இட்ட படம் இது.நானும்கூட இப்படத்துக்குக் கவிதை ஒன்று எழுதி வைத்திருக்கிறேன்//

நல்ல ரசனையுள்ள படம் என நண்பர் மகேஷ் எனக்கு அனுப்பி வைத்த படம்...

நன்றி ஹேமா ..

YUVARAJ S சொன்னது…

IDHU THAANGA ULTIMATE COMEDY PIECE!!!

YUVARAJ S சொன்னது…

IDHEPOLA SAUDI ARABIYAVUKKUM BAHRAIN NAATUKKUM CAUSEWAY VAZHIYAAGA POKUVARATHU NADAKIRADHU. IMMIGRATION ELLAM KADAL MELA THAAN. ADHU PATRI ORU SUVRASYAMAANA PADHIVA SEEKIRAM PODUREN.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்

மொதல்ல இருக்கற படம் சூப்பர் - பய தொடறதும் அவ வெக்க்கபப்டறதும் சூப்பரோ சூப்பர்

கடசியா பான் கார்டு படம் வேற ........

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா