29 ஜூன், 2010

பதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்கும் வீடியோ 18+Courtesy by TED


சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் கற்பழிக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து  போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது..

ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுனிதா கிருஷ்ணன்.

தான் காப்பாற்றிய குழந்தைகளை மனித மிருகங்கள் சில நான்கு வயது என்று கூட பார்க்காமல் சீரழித்த கொடூரம் ஆன்மீகமும், தெய்வத்தன்மையும் நிரம்பியுள்ள நம் தேசத்தில்தான் நடந்திருக்கிறது.. செக்ஸ் அடிமைகளாய் விற்கப்பட்ட அல்லது வறுமை காரணமாய் அல்லது விரும்பியே தொழில் செய்யும் பெண்கள் HIV ஆட்கொல்லி நோயில் விழும்போது அவர்களின் சம்பாத்தியத்தில் வாழும் அத்தனை பேரும் நிராதரவாய் விட்டுப் போகும் கொடூரமும் நம் தேசத்தில்தான் நடக்கிறது.

அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வந்து அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பை தேடும்போது இந்த நாகரிக சமூகம் அவர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது ஏன்.. வாரம் இரண்டாயிரம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு பெண்மணி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்கள் வேண்டாம் என மறுக்கும்போது வருத்தமாயிருக்கிறது..

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது..  நான் அடிப்படை மனித நேயம் விரும்புகிறவன்... இனி சில நாட்கள் என்னை பாதித்த.. என்னை யோசிக்க வைத்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. 

இதுவரை பைசா பெறாத நிறைய விசயங்களை என் பதிவுகளில்  இட்டு நிரப்பி வந்த நான் வாழ்க்கை இப்படியும் இருக்கிறது.. இப்படியும் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. அவற்றுள் பல பதிவுகள் சற்று அப்பட்டமான விமர்சனமாக இருக்கும்..18+ என்று அடையாளமிட்டே எழுதப்போகிறேன்.. 

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகள் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருக்கும்..

இணைப்புகள் :


53 கருத்துகள்:

Chitra சொன்னது…

Yeah, I saw this video before. It is very moving and touching. I admire this courageous lady!

க ரா சொன்னது…

மிருகங்கள் கூட இப்படி கேவலமாக நடக்காது. இத்தகய கொடுமைகளை எதிர்த்து போராடி வரும் சுனிதா கிருஷ்ணண் போற்ற பட வேண்டிய தேவதைதான். நல்ல பகிர்வு செந்தில்.

பெயரில்லா சொன்னது…

முதலே பார்த்த வீடியோ தான் இது. யூடியூப் ஒரு பெருஞ் சமுத்திரம். சும்மா சும்மா தட்டும் போது சில வேளைகளில் இப்படியான வீடியோக்களைப் பார்ப்பதுண்டு. என்ன, பிறகு இரண்டு நாட்களுக்கு சாப்பாடே இறங்காது. பகிர்ந்து கொள்ளும் மனத் வலிமை இல்லாததால் அப்படியே சேவ் பண்ணி வைத்து விட்டு போய்விடுவேன். பகிர்ந்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

பனித்துளி சங்கர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பனித்துளி சங்கர் சொன்னது…

அதிர வைத்துவிட்டது இந்தப் பதிவை வாசித்த மறு நொடி .!

இத்தகய கொடுமைகளை எதிர்த்து போராடி வரும் சுனிதா கிருஷ்ணண் அவர்களை பற்றி எழுத வார்த்தைகள் எதுவும் இல்லை

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

you r very bold machi... congrats for your attitude...

நேசமித்ரன் சொன்னது…

கைக் குடுங்க செந்தில் சார் !

நான் முன்னமே பார்த்ததுதான் ஆனாலும்
பகிர்வுக்கு ஒரு சபாஷ் !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகள் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருக்கும்..//
உண்மை தான் .
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .

ஹேமா சொன்னது…

ஏன் சிலருக்கு இப்படி ஒரு மிருகத்தனம்.
மனம் அதிர்ந்து பதறுகிறது செந்தில்.

AkashSankar சொன்னது…

தவறுகளை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது... அவர்கள் மனித வடிவில் திரியும் மிருகங்கள்...பணத்தை மட்டுமே பார்க்கும் முதலைகள்...(சில காவல்துறையினர்)

Karthick Chidambaram சொன்னது…

இதயம் வலிக்கிறது. வாழும் உரிமையும் தற்காத்துக்கொள்ள ஆதரவும் சமூகம் தந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் சமூகம் இருந்து ஒரு பயனும் இல்லை.சுனித்தா கிருஷ்ணன் போன்றவர்கள் பாராட்டப்படவேண்டும்.

Unknown சொன்னது…

கண்ணீர் விட வைத்த கனமான பதிவு. இதை படித்தவர்கள் கட்டாயம் பலரிடம் சொல்லுங்கள். கேவல மனிதர்களை கிழித்தெறிய ஆவன செய்வோம். தொடருங்கள் செந்தில்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கனமான பதிவு...இதயம் பதறுகிறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகள் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருக்கும்..//

unmaithaaan annaa. thanks for sharing

Paleo God சொன்னது…

ஹும்ம்..
:(

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

18+ என்ற பெயரில் ஒரு குறி சொல் (லேபிள்) கொடுத்துவிடுங்கள்.

Unknown சொன்னது…

18+ என்ற பெயரில் ஒரு குறி சொல் (லேபிள்) கொடுத்து விடுகிறேன் பாலபாரதி அண்ணா ..

ஜோதிஜி சொன்னது…

இந்த அளவிற்கு தெளிவான ஓலி ஓளி கோப்பை இது வரைக்கு வலை தளத்தில் நான் பார்த்து இல்லை. அதற்கு முதலில் நன்றி செந்தில்.

பயன்படுத்தி தூக்கி எறிதல்.............

சுனிதா சொன்ன இந்த வார்த்தைகள் மொத்த நாகரிக வளர்ச்சியையும் யோசிக்க வைத்தது.

இது போன்ற நபர்கள் தான் நம்மைச்சுற்றி அப்பாவாக, சகோதரர்களாக,நண்பர்களாக இருக்கிறார்கள் என்ன போது..............

என்ன சொல்லமுடியும்?

தாக்கம் மறைய நாளாகும். கடந்து வந்த சுனிதாவின் தன்னம்பிக்கை அவரின் தெளிவான வார்த்தைகளே உணர்த்துகிறது.

நாடோடி சொன்னது…

சுனிதா கிருஷ்ண‌ன் போற்ற‌ ப‌ட‌ வேண்டிய‌வ‌ர் தான்... மிருக‌ங்க‌ளின் தோல்க‌ள் உரிக்க‌ப‌ட‌ வேண்டிய‌தே...‌ ந‌ல்ல‌ விச‌ய‌ம் செந்தில் அண்ணா... தொட‌ந்து எழுதுங்க‌ள்..

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

Can I give a link of this page in my blog ?

it was moving ..... and I can't belive it its happening in India, though we ( I) knew its happening, its very powerful ....message is very clear ... கையாலாகா
தனத்தை மிக நேரடியாக , சத்தமாக , உறைக்குமாறு சாடிவிட்டார், என்ன பெண்மணி அவர் .... என்ன தைரியம் , என்ன துணிச்சல் , .... நாம் எல்லாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தமே இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்

ஏதாவது செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒரு வழியை முதலில் பார்க்க வேண்டும்

Unknown சொன்னது…

வணக்கம் நண்பா.. இதைதான் எதிர்பார்த்தேன்.. நீங்கள் தாராளமாக லிங்க் கொடுக்கலாம்...

மேலும் இந்த பதிவில் அவரைபற்றிய மற்றும் அவரின் சேவை தளம் பற்றிய இணைப்புகளை கொடுத்துள்ளேன் அவற்றினை அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என் வேண்டுகிறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகள் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருக்கும்..

///

எவருக்கும் எதிர்ப்பில்லை.. அப்படியே இருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் எழதுங்கள் சகோதரா. நாங்கள் இருக்கிறோம் உங்கள் பின்னால்...

ஜெயந்தி சொன்னது…

இவர்களை உலகிற்குக் காட்டும் உங்கள் பணியும் மிகச் சிறப்பானதே. இதைப் பார்த்தாவது உலகத்தை சிலராவது புரிந்துகொள்ளட்டும்.

pichaikaaran சொன்னது…

good effort...

tsekar சொன்னது…

உண்மை -வலிக்கதான் செய்யும்!!!

மனிதர்களை -மதித்து -மானுடம் -காப்போம்

வால்பையன் சொன்னது…

மிக அவசியமான பகிர்வு!

சசிகுமார் சொன்னது…

என்ன கொடுமை சார், இந்த மிருகங்களுக்கு எதிராக போராடும் சுனிதாவிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி தொடரட்டும்

மாதேவி சொன்னது…

மனம் கலங்குகின்றது.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு செந்தில்.

சுனிதா கிருஷ்ணன் போற்றுதலுக்குரிய பெண்.

தொடருங்கள் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

சுனித கிருஷ்ணன் கம்பீரத்தின் அடையாளாமாய் இருக்கிறார்.
அவருக்கு என் மரியாதை வணக்கம்.

மிக சிறந்த பதிவு இது .... தொடர்ந்து எழுதுங்க.
நன்றி தோழா.

அன்புடன் நான் சொன்னது…

இந்த பதிவை போலவே பின் குறிப்பும்.... எழுதுங்க.

ரமேஷ் வீரா சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா ,

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மைகள் எப்போதும் நிர்வாணமாகத்தான் இருக்கும்..

உண்மை என்பதே நிர்வானம்தனே அண்ணா , எனவே இதுபோன்று உண்மை சம்வங்களை தொடர்ந்து எழுதுங்கள் .......

kavisiva சொன்னது…

மனம் கலங்குகிறது. இந்த மனித மிருகங்களை கோர்ட் கேஸ் என்று இழுக்காமல் சுட்டுத் தள்ள வேண்டும்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

வாழ்த்துக்கள், எழுதுங்கள் விரிவாக படிக்க ஆவலாய் உள்ளேன்.

நாமும் (நானும்) யோக்கியன் அல்ல, நமக்கு (எனக்கு) கற்பழிக்க சந்தர்ப்பம் அமைய வில்லை அவ்வளவே.

நித்யானதாவிர்க்கு அதிர்ஷ்டமும் திறமையும் இருந்தது, நமக்கு இல்லை - அவ்வளவே.

சௌந்தர் சொன்னது…

இப்படி நிறையே உண்மையை நீங்கள் எழுத வேண்டும் அண்ணா

அண்ணா உங்க பதிவை ஈமெயில் மூலம் படிக்க வேண்டும் அதை செயுங்கள் (FeedBurner)

அன்புடன் அருணா சொன்னது…

என்ன சொல்வதென்றே புரியவில்லை.

தமிழ் மதுரம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள். மிருகங்கள் மனித உருவிலா இல்லை மனித உருவத்திற்குள் மிருகங்களா?

vasan சொன்னது…

செந்தில்,
அதிச்ச்சி அதிர்வுக‌ளை தொட‌ர்ந்து உண‌ர்கிறேன்.
சுனிதா கிருஷ்ண‌னின், தெளிவும், துணிவும்,
பாராட்ட‌, மேலும், மேலும் ப‌ர‌ப்ப‌ப்பட‌வும்
வேண்டிய‌து அவ‌சிய‌ம்.
தாங்க‌ள் முன்னேடுத்துள்ள‌ இதுவும்
அவ‌ர்க‌ளின் தொண்டுக்கு உத‌வும்.
நாட்டில் இன்னும் ப‌ல‌ர் ம‌னித‌க‌ளாய்,
நேய‌த்துட‌ன் இருக்கிறார்க‌ள் என்பதே
மிக‌ ஆறுத‌லாக‌வும், நிறைவாக‌வும்.

Swengnr சொன்னது…

ரொம்ப கொடுமை இது! விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை தீண்டுவதை எப்படி தான் இவர்கள் மனம் ஒத்து கொள்கிறதோ? பகிர்வுக்கு நன்றி!

தெய்வமகன் சொன்னது…

இந்த வீடியோவை பார்த்து இதயம் கனக்கிறது... கொடூர மனித விலங்குகளுக்கு மத்தியில்தான் நாமெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

புலவன் புலிகேசி சொன்னது…

நல்ல முடிவு. இது போன்ற பதிவுகள் தான் இன்றைய தேவை. வாழ்த்துக்கள்

geethappriyan சொன்னது…

நண்பா,
மிகவும் அவசியமான பதிவு,பெடோஃபைல் நாய்களை சுட்டுத்தள்ள வேண்டும்.என்ன ஆச்சர்யம்,நானும் போன வாரம் ஒரு விழிப்புணர்வு பதிவிட்டு குமுறினேன்.
இந்த காணொளியையும் இணைத்துவிட்டேன்.மிகவும் கொடுமை நண்பா,என்னிடம் எவனாவது மாட்டினால் தீர்ந்தான்,கொலவெறி

geethappriyan சொன்னது…

ஹார்ட் கேண்டி[18+] [அமெரிக்கா][Hard Candy][2005]
பெடோபைல் ஆசாமிகள் ஏன் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்?பெடோபைல் அசாமிகள் ஏன் சமூகத்தில் மிகவும் அருவருக்கத்தக்கவர்கள்? இதோ விடை
http://geethappriyan.blogspot.com/2010/06/18-hard-candy2005.html

dheva சொன்னது…

//உண்மை நிர்வாணமாகத்தான் இருக்கும்......//

சபாஸ் செந்தில்.... ! நெருப்பை கக்கும் பேனாக்கள் வேண்டும் வலைப்பக்கத்திற்கு....! எழுதும் எழுத்தின் மூலம் உண்மையை தோலுரிது சமுதாய அவலங்களை மக்கள் மன்றத்தின் முன் தர தர வென்று இழுத்து வந்து....இதோ....இதுதான்....பாருங்கள் மக்களே....

இதுதான் நாம் வாழும் சமுதாயம் என்று காறித்துப்பி காண்பிக்கும் தைரியமும், பாதகம் செய்பவரைக் கண்டால் காறி உமிழ்ந்து, மோதி மிதிக்கும் பாரதி கொண்ட ரவுத்திரமும் தெறித்து விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பன்வன் நான்......உங்களின் எழுத்துக்களோடு...இதோ..இதோ...இக்கணமே கைகோர்க்கிறேன்.....உம்மின் தோளோடு தோள் சேர்க்கிறேன்...

எரியட்டும் எரிமலைகள் எழுத்துக்களின் மூலம் அதில் பொசுங்கி அழிந்தே போகட்டும் தீமைகள்.....! அற்புதமான ஒரு பகிர்வு....தோழரே.....! உம்மை கட்டி அணைத்து எம்மின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....!

முனியாண்டி பெ. சொன்னது…

ரொம்ப கொடுமை இது. அவசியமான பதிவு.

Unknown சொன்னது…

நண்பா இந்தமாதிரியான நல்லவிசயங்களை பற்றி எழுதுவதுதான் உண்மையான பதிவருக்கு அடையாளம். பதிவுலகின் சிலரைப்போல வாக்கு பிச்சை கேட்காமல் நற்பணி தொடர இந்த நண்பனின் வாழ்த்துக்கள் .

மார்கண்டேயன் சொன்னது…

உண்மையிலேயே தெரிந்து கொள்ளப்படவேண்டிய விஷயம் இது . . . எவ்வளவு தான் படித்து பண்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் . . . இன்னும் நாம் நம் சமூகத்தினரால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் அடைந்தோரை அரவணைக்கும் அளவிற்கு வளரவில்லை (நானும் இதில் அடக்கம்)

கபிலன் சொன்னது…

முழுவதும் பார்த்தேன்......
கை கோர்க்கிறேன் உங்களுடன்...
மனித நேயம் வளர்க்க......

கபிலன் சொன்னது…

அன்பின் செந்தில்...
உங்கள் அனுமதி உண்டு என்று granted ஆக எடுத்துக்கொண்டு...
என் பக்கத்தில் இதற்க்கு லிங்க் கொடுத்துள்ளேன்.

Thamira சொன்னது…

தேவையான பகிர்வு. சேவை தொடர்க செந்தில்.

(சுனிதாவின் உரையை அதன் உணர்வுகள் குறையாமல் யாராவது தமிழாக்கம் செய்தால் பலரின் வேக வாசிப்புக்கும் கொண்டுசெல்லமுடியும்.)

பெயரில்லா சொன்னது…

கண்ணீர் என்னையுமறியாமல் ..... இந்த பதிவிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இதனை இணைத்து நானும் ஒரு பதிவெழுத முடிவு செய்துள்ளேன். அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

Unknown சொன்னது…

//இதனை இணைத்து நானும் ஒரு பதிவெழுத முடிவு செய்துள்ளேன். அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.//

நீங்கள் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம் நண்பா..

பெயரில்லா சொன்னது…

அன்னை தெரசா நெட்டிங்கேல் இவர்கலைபோன்றோர்கள் இறக்கவில்லை விதைக்கபட்டுயிருக்கிறாகள் அதற்குசான்றூ சுனிதா கிருட்டினான் சுனிதா அவர்களூகு மனிதநெயத்துடன் அவர்களூகடன் துனைநிற்போம் அ.மாணீக்கவேலு