13 ஜூன், 2010

புலிகளின் குணம்..புலிகள் சிநேகமானவை 

பசியற்று இருக்குபோது 
கொல்லாமை தத்துவம் 
கொள்பவை..

எப்போதும் பதுங்கித்தான் பாயும் 
ஆக்ரோசமான  தாக்குதலாக இருக்கும் 
ஒரே அடி 
மரணம் நிச்சயம் ..

குழுவாகத்தான் வாழும் 
குட்டிகளுக்கு 
பிறந்த நாள் முதலாய் 
வேட்டையாடப் பயிற்சியும் ..

சில சமயம் 
தனியாய்ப் போகும் புலியை 
கூட்டமாக வந்து 
கழுதைப் புலிகள் கொல்வதுண்டு..

சிங்கம் அரசாளலாம்,
புலிகளின் காட்டில் நுழைய 
பயம் கொள்ளும் சிங்கம் 

சிங்கம் கிடைத்தவற்றை உண்டு 
வாழ்வை தக்க வைப்பவை, 
பசித்து செத்தாலும்
கொள்கை மாறாதவை புலிகள் 

ராசராசன் 
ராசேந்திரன் 
பிரபாகரன் 
புலிகளே வரலாறு ...

33 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்று.

உருவகமும் உள்ளீடும் ..........

எல் கே சொன்னது…

//பசியற்று இருக்குபோது
கொல்லாமை தத்துவம் /

thavaru, puli manithani kandal kondru vittuthan aduta velai seeyum..

dheva சொன்னது…

//சிங்கம் கிடைத்தவற்றை உண்டு
வாழ்வை தக்க வைப்பவை
பசித்து செத்தாலும்
கொள்கை மாறாதவை புலிகள் //


unmaithaan Boss... !neenga kalakkunga!

Karthick Chidambaram சொன்னது…

//சில சமயம்
தனியாய்ப் போகும் புலியை
கூட்டமாக வந்து
கழுதைப் புலிகள் கொள்வதுண்டு..//
இது மிக புதிய செய்தி எனக்கு.

அன்புடன் நான் சொன்னது…

புலிகள் பாதுகாக்கப்படவேண்டியவை!
பகிர்வுக்கு நன்றிங்க செந்தில்.

ஜெய்லானி சொன்னது…

புலி ..புலி...
:-))))

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// thavaru, puli manithani kandal kondru vittuthan aduta velai seeyum..//
LK சார் ...
நீங்க காங்கிரஸ்காரரா....

//சில சமயம்
தனியாய்ப் போகும் புலியை
கூட்டமாக வந்து
கழுதைப் புலிகள் கொள்வதுண்டு..//
இது மிக புதிய செய்தி எனக்கு. //
கார்த்திக் நீங்க tv news , news papers எதுவும் பாக்றதில்லையா ...

எல்லா பதிவிலும் தொடர்ந்து கலக்குறீங்க KRB !

சின்னப்பயல் சொன்னது…

புலி பசித்தாலும் 'தண்டவாளம்' சாப்பிடாது.

ny சொன்னது…

புலிகளே வரலாறு ...ம்

AkashSankar சொன்னது…

//ராசராசன்
ராசேந்திரன்
பிரபாகரன்
புலிகளே வரலாறு ...//

புல்லரிக்குதுங்க..

க ரா சொன்னது…

அருமை செந்தில்.

அத்திரி சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்........டாப்பு

வினையூக்கி சொன்னது…

அருமை !!

இந்தியாவின் தேசியவிலங்கு புலி, உலகின் சிறந்த நகைமுரண்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
எப்போதும் பதுங்கித்தான் பாயும்
ஆக்ரோசமான தாக்குதலாக இருக்கும்
ஒரே அடி
மரணம் நிச்சயம் ..
//

என்னை ரொம்ப புகழாதீங்க.

Asiya Omar சொன்னது…

புலி பற்றிய கவிதை அருமை.சொன்ன கருத்து பொருத்தம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை தோழா .

Swengnr சொன்னது…

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!

சௌந்தர் சொன்னது…

சிங்கம் கிடைத்தவற்றை உண்டு
வாழ்வை தக்க வைப்பவை,
பசித்து செத்தாலும்
கொள்கை மாறாதவை புலிகள்


உண்மை தான் எல்லா ......புலிகளும்

Unknown சொன்னது…

புலி நேசிப்பாளர்கள் ..

கலாநேசன்

LK

dheva

Karthick Chidambaram

சி. கருணாகரசு

ஜெய்லானி

நியோ

சின்னப்பயல்

kartin

ராசராசசோழன்

இராமசாமி கண்ணண்

அத்திரி

வினையூக்கி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

asiya omar

நண்டு @நொரண்டு -ஈரோடு

Software Engineer


நேசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

நேசமித்ரன் சொன்னது…

புலி நகம் என்று
அணிந்திருக்கிறார்கள்
பிளாஸ்ட்டிக் பிறைகளை

ஒரு நாள் பதியலாம்
மெய்யாகவே


கவிதை நன்றாக இருக்கிறது செந்தில் சார் கடைசி பத்தி இல்லாமலும் உள்ளீடு அடர்த்தியாக புரிந்திருக்கும்

முனியாண்டி பெ. சொன்னது…

என்னை மிகவும் பாதித்தது உங்கள் கவிதை.

http://adisuvadu.blogspot.com/2010/05/blog-post_06.html

பனித்துளி சங்கர் சொன்னது…

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Kumar சொன்னது…

//பசித்து செத்தாலும்
கொள்கை மாறாதவை புலிகள் //

TRUE...It is many times evident and the ppl who know the history deep could realise this

YUVARAJ S சொன்னது…

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

Bibiliobibuli சொன்னது…

புலிகளின் குணம் கவிதை நன்று. தமிழ்மணத்தில் எதிர்மறை வாக்கு விழாததிற்கும் வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பசியற்று இருக்குபோது
கொல்லாமை தத்துவம்
கொள்பவை..//

சமூகப்பார்வை கவிதையில் பின்னல் கவிஞர் செந்தில்

Chitra சொன்னது…

ரொம்ப அருமையாக எழுதி இருக்கீங்க....!

வெத்து வேட்டு சொன்னது…

புலியும் கழுத்துக்கு துவக்கு வந்தால் சரணடையும் :) :)

Unknown சொன்னது…

புலி நேசிப்பாளர்கள் ..

நேசமித்ரன்

முனியாண்டி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

Kumar

YUVARAJ S

Rathi

ப்ரியமுடன்...வசந்த்

Chitra

நேசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

யூர்கன் க்ருகியர் சொன்னது…

நண்பா,,, நரிகளும் ஓநாய்களும் ஓவரா ஆட்டம் போடுது நண்பா... ...

வெள்ள கலருல ஒரு ஓநாய் இருக்கு நண்பா .... அது தாடி வச்ச நரி கிட்ட "இரை" யாண்மை பத்தி மந்தரம் ஓதுது நண்பா... நம்ம ஊரிலும் சில அள்ளக்"கை" ஓநாய்கள் வடக்கில் இருந்து விழும் எலும்பு துண்ட கவ்விகிட்டு நான் -ஸ்டாப்பா ஊளை இடுது நண்பா...

என்ன நண்பா பண்றது ?

டைம் சரியில்லை நண்பா... முகூர்த்தம் கூடி வரும்போது ரம்மி ஆடிட வேண்டியதுதான் நண்பா..

Paleo God சொன்னது…

அருமை செ.!

pichaikaaran சொன்னது…

மிகவும் ரசித்தேன்...
"பிரபாகரன்
புலிகளே வரலாறு"

எத்தனை புலிகள் வந்தாலும் , அதில் சிறந்த புலி பிரபாகரன் என்பதையும்,. அந்த புலி பல புலிகளை கொன்றது வரலாற்று தவறு என்பதையும் வரலாறு, பெருமையுடனும் சோகத்துடனும் பதிவு செய்ய மறக்காது

Unknown சொன்னது…

பார்வையாளன் சொன்னது…
மிகவும் ரசித்தேன்...
"பிரபாகரன்
புலிகளே வரலாறு"

எத்தனை புலிகள் வந்தாலும் , அதில் சிறந்த புலி பிரபாகரன் என்பதையும்,. அந்த புலி பல புலிகளை கொன்றது வரலாற்று தவறு என்பதையும் வரலாறு, பெருமையுடனும் சோகத்துடனும் பதிவு செய்ய மறக்காது;'


அந்த புலி கொன்றது பல புலிகளை அல்ல. புலி வேடம் போட்ட கழுதைப்புலிகளை. வரலாறு ரொம்ப முக்கியம் அன்பரே.