17 ஜூன், 2010

கடவுள் பிச்சை ...

எப்போதும் 
எதுவும் தருவதில்லை கடவுள் 
நமக்கு  மட்டும் தீர்வதில்லை 
நேர்த்திக் கடன்கள்..

கல்லுக்கு அலங்காரம் 
கற்பனை புகழாரம் 
கடவுளுக்கும் தரகன் 
நிரம்பி வழியும் உண்டியல் 
வாசலில் பிச்சைக் காரன் 
கலாசாரம் பண்பாடு.

ஜாதகம் 
சாதகமில்லை எனில் 
சாங்கியம் நிறைய உண்டு 
சாங்கியமும் பலிக்கலையா..?
முன்னோர்களை பழி சொல் ..

நன்றாக உற்றுப் 
பாருங்கள் 
சாத்தானை வணங்குகிறீர்கள் 
எப்போதும் சாத்தான் 
நன்மையை பெற்றுக் கொண்டு 
தீயதையே தருவான்..

அல்லா
இயேசு 
விஷ்ணு 
புத்தா 
உங்களை சகல துன்பங்களில் இருந்தும் 
காப்பாற்றுவார்..
பிரசங்கிகள் சம்பாதிக்கின்றனர்..

இன்னொரு மீட்பர் 
இனி வரவே போவதில்லை 
உன் முட்டாள்தனம் மாறும்போது 
நீயே உன்னை மீட்பாய்....

22 கருத்துகள்:

pichaikaaran சொன்னது…

உங்கள் உணர்வு புரிகிறது..

"
கடவுளுக்கும் தரகன்
நிரம்பி வழியும் உண்டியல் "

ரசித்தேன்.... அதே போல , கடவுள் இல்லை என சொல்பவரின் தரகர்களுக்கும் , உண்டியல் நிரம்பி வாழ்வதை பார்க்கையில், அடிப்படை தவறு நம்மிடம் இருப்பதை , நீங்கள் புரிந்து வைத்து இருக்குறீர்கள் என்பதை.

"இன்னொரு மீட்பர்
இனி வரவே போவதில்லை
உன் முட்டாள்தனம் மாறும்போது
நீயே உன்னை மீட்பாய்...."

இந்த வரிகளில் சொல்லி விட்டீர்கள்..

அருமை... அருமை....

வால்பையன் சொன்னது…

//இன்னொரு மீட்பர்
இனி வரவே போவதில்லை
உன் முட்டாள்தனம் மாறும்போது
நீயே உன்னை மீட்பாய்....//


மிகச்சரியான வரிகள்!
கவிதை தன் வருகையின் நோக்கத்தை சிறப்பாக பூர்த்தி செய்தது!

Ahamed irshad சொன்னது…

பிரசங்கிகள் சம்பாதிக்கின்றனர்..//

true true...

AkashSankar சொன்னது…

நறுக்கென... ஒரு கவிதை...

ஹேமா சொன்னது…

செந்தில் இண்ணைக்கு ராத்திரிக்குச் சாமி வந்து உங்க கண்ணைக் குத்தப்போகுது.

இவங்களயெல்லாம் மாத்தலம்ன்னு நினைக்கிறீங்க !

Riyas சொன்னது…

ம்ம்ம்...

ஜெய்லானி சொன்னது…

உள்ளேன் ஐயா..

நேசமித்ரன் சொன்னது…

நீயே உன்னை மீட்பாய்....


இந்தப் படமும் மேற்கண்ட வரியும் ம்ம்ம்
ந்ன்றி தோழர் !

டெம்ப்ளேட் வார்த்தை ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல்

VELU.G சொன்னது…

மிக அழகாக வந்து விழுந்திருக்கின்றன வார்த்தைகள்

சொல்ல வந்த கருத்து சிறப்பாக வந்திருக்கிறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரசங்கிகள் சம்பாதிக்கின்றனர்//

list venumaa?

க ரா சொன்னது…

உண்மை தோழர்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அருமையான பகிர்வு..
நாமாக உணர்ந்து மாற்றி கொண்டால் அன்றி...
இது மாறப்போவதில்லை...!!

Paleo God சொன்னது…

அருமை செ.!

--

உங்களையே நீங்கள் மீட்டெடுத்து ஒரு நல்ல டெம்ப்ளேட் மாற்றுவீராக! :))

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

உண்மையான வரிகள் நண்பா

Asiya Omar சொன்னது…

வழக்கம் போல் கவிதை அருமை..

Unknown சொன்னது…

தன்னை மீட்டவர்கள் ...

பார்வையாளன்

வால்பையன்

அஹமது இர்ஷாத்

ராசராசசோழன்

ஹேமா

Riyas

ஜெய்லானி

நேசமித்ரன்

VELU.G

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

இராமசாமி கண்ணண்

Ananthi

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

வெண்ணிற இரவுகள்....!

asiya omar

வசித்து கருத்துரைத்த அனைவருக்கும் என் நன்றிகள் ...

பனித்துளி சங்கர் சொன்னது…

///////இன்னொரு மீட்பர்
இனி வரவே போவதில்லை
உன் முட்டாள்தனம் மாறும்போது
நீயே உன்னை மீட்பாய்....////////

இறுதியாக நான்கு வரிகளில் அருமையான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி

ரமேஷ் வீரா சொன்னது…

கல்லுக்கு அலங்காரம்
கற்பனை புகழாரம்
கடவுளுக்கும் தரகன்
நிரம்பி வழியும் உண்டியல்
வாசலில் பிச்சைக் காரன்
கலாசாரம் பண்பாடு.ஜாதகம்
சாதகமில்லை எனில்
சாங்கியம் நிறைய உண்டு
சாங்கியமும் பலிக்கலையா..?
முன்னோர்களை பழி சொல்இன்னொரு மீட்பர்
இனி வரவே போவதில்லை
உன் முட்டாள்தனம் மாறும்போது
நீயே உன்னை மீட்பாய்....

super varigal brother..................

முனியாண்டி பெ. சொன்னது…

எல்லாம் உண்மையான வார்த்தைகள். உண்மையில் பாராட்ட வார்த்தை தேடினேன்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நிரம்பி வழியும் உண்டியல்
வாசலில் பிச்சைக் காரன் //

உ(அ)வமான கவிதை...

பெயரில்லா சொன்னது…

"கடவுளை மற... மனிதனை நினை..." - ஈரோடுக் கிழவனின் கூற்று.

பிறருக்கு தன்னாலான உதவிகளை செய்து, அது முடியாவிட்டால் கூட, தீயது நினையாமலிருந்தால், நாத்தீகனுக்கு கூட கடவுள் அருள் புரிவார்.
ஆனால் நாம் செய்வது என்ன??? "கடவுளை வணங்குகிறேன்" என்று கூறிக் கொண்டு மனதில் ஆயிரம் குப்பைகளை சேர்ப்பது... எப்படி அருள் பாலிப்பார்?

பெயரில்லா சொன்னது…

sindhanai thoondum varigal.
kalakkungal...