24 ஜூன், 2010

டக்கீலா - ஒரே கல்ப் ... உள்ளுக்குள் தீ பரவும் ...


தமிழ் வலையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை கேபிள் சங்கர்.. பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்தமான ஆள்.. எல்லா சினிமாவையும் பார்த்துவிடகூடிய சினிமா வெறியன்.. சினிமா ஒரு மாயவலை அதை திறம்படக் கையாளும் கலையை கொண்ட வெகு சில நபர்களில் இவரும் ஒருவர்.. இவரின் நிதர்சனக் கதைகள் அனைத்திலும் உண்மைகள் நிறைய இருக்கும்.. சற்றே ராவாக இருந்தாலும் உண்மையை அப்பட்டமாகத்தான் சொல்லமுடியும்.. '
அவரின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்... - என் பார்வையில்
  


முத்தம்.. 

                உங்களுக்கு ஒரு ராங்கால் வருகிறது அதுவும் தொடர்ந்து வருகிறது... நீங்கள் என்ன செய்வீர்கள், நானென்றால் எரிச்சலாகி பரம்பரையை கூப்பிடுவேன்..இங்கு ஒரு ஆள் ஒரு மொழி தெரியாத பெண்ணின் அழைப்பை அதன் குரல் பதட்டத்தைக்  கண்டு அவளைத் தேடப்போய் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அவளைக் காப்பாற்றி அனுப்புகிறான், அவளோ ஒரு விபச்சாரி அவள் பார்த்த ஆண்களில் வித்தியாசமான இவனுக்கு தன்னால் முடிந்த அந்த பரிசு ,எத்தனை அழுத்தம் .. இப்போதும்  அவன் எச்சிலில் அது கலந்திருக்கும் ... முத்தச்சுவை ...

டக்கீலா...
                 போதை வஸ்துகளில் டகீலாவின் குணம் வித்தியாசமானது, ஒரே கல்பில் அதை அடிக்கணும், முடித்தபின் உள்ளுக்குள் தீ பரவும் பரவசம் ஒரு கடவுள் அனுபவம்.. பதினைந்து நாளில் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியுமா..? காதல் கற்றுக் கொடுக்கும், இந்திய கலாசாரத்தை நேசிக்கும் ஒரு ஸ்பெயின் இளைஞன் எப்படி இருப்பான்.. அவன் தன் வயதை சொன்னபோது ஒரு கணம் எனக்கு வயது கூடிப்போனது .. 

கல்யாணம்.. 
                   இப்படி ஒரு பேரை வைத்துக் கொண்டு கல்யாணம் ஆகாது போனால் தன் பெயர் மீது அதை கூப்பிடுவோர் மீது கண்டிப்பாக ஒரு வெறுப்பு வரும்.. எல்லா ஆண்களுக்கும் இயல்பாகவே இருக்கும் கல்யாணக்  கனவில் அவன் தேவதைகளின்  வடிவங்கள் புனிதமானவை, சந்தர்ப்பங்களை தன் வடிகாலுக்கு தேடிபோகும் கல்யாணம் அங்கும் அதே புனிதத்தை எதிர்பார்க்க என்ன ஆகும்.. வெறுத்துப்  போனான் கல்யாணம் ..

ஆண்டாள்..
                   பெண்களுடன் பேசுவதென்றால் அதற்க்கு தனி தயாராதல் உண்டு, அதுவும் பள்ளி நாட்களில் நம் பெண் சிநேகிதர்கள் சொற்பமே. அதிலும் ஈகோ நிரம்பி வழியும் ஒரு பெண் சிநேகிதிக்கு நாம் இன்னொரு பெண்ணுடன் சிநேகிதம் கொள்வது பிடிக்குமா என்ன? காலங்கள் கடந்தும் அவள் வெறுப்பை சுலபமாக காட்டி செல்கிறாள்.

இரண்டு கிளைமாக்ஸ்.. 
                                            வன்மங்கள் வளர்ந்து கொண்டே இருப்பவை. சாவிலிருந்து மீளும்போதும் வாழ்க்கை தத்துவம் பிடிபடாது மீண்டும் அதே வன்மம் தலைவிரித்தாடும் கோழைத்தனம்.. அந்த காதல் சாகக்கூடாது என நெஞ்சம் பதைபதைக்கிறது ..

தரிசனம்.. 
                 புட்டபர்த்தி போய் இருகிறீர்களா, அல்லது ஏதாவது சாமியார் ஆசிரமம் சென்றதுண்டா.. அங்கு சாமியார் தரிசனம் கண்டதும்.. கண்ணீர் விட்டழும் பக்தர்களைக் கண்டதுண்டா.. ஒரு நாடகத்தை அங்கு திறம்பட நடத்தி நம்மை உள்ளுக்குள் உருகவைப்பார்கள்.. எத்தனை சாமியார் சிறை சென்றால் என்ன..? சாமியார்கள் வந்துகொண்டே இருப்பார்கள் ...

போஸ்டர்.. 
                   எங்கு பார்த்தாலும் தலைவனின், சினிமாவின், வாழ்த்தி, கண்ணீர் விட்டு, புரட்சிக்கு கூப்பிட்டு போஸ்டர்கள் இல்லாமல் இருக்கும் சுவர்கள் அசிங்கம் என்று ஆகிவிட்டது. எல்லாத்துக்கும் விளம்பரம், விபசாரத்துக்கு அழைக்கும் விளம்பரம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்.. கதையல்ல நிஜம் ...

துரை.. நான் .. ரமேஷ்.. 
                                       எப்படி இருந்தாலும் சாய்ந்து கொள்ள தோள் தேடும் பெண்கள் இருக்குவரை, ஆண்கள் கட்டாயம் அயோக்கியத்தனம் செய்வார்கள்.. பொதுவாகவே பெண் தாய்மை கொண்டவள் என்பதால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு சீக்கிரம் அடிமையாகிறாள்.. எத்தனை பிரச்சினை வந்தாலும், எல்லோரும் ஏமாற்றினாலும் இன்னொரு ஆள் ஆறுதல் சொல்ல அனைத்தும் மறந்து மீண்டும் அடிமை ஆகிறாள்..

என்னை பிடிக்கலையா?..
                                        ஒரு நடுத்தர குடும்பத்தலைவனின் சராசரிக் கடமைகள் பிரச்சினை மிகுந்தவை., தன் மனைவி பிள்ளைகளுக்காக அவன் செய்யக்கூடிய  தியாகம் அளவிட முடியாதது, எல்லா இடங்களிலும் அலைந்து, அவமானப்பட்டு அலுத்து இல்லம் திரும்பும் அவனுக்கு நிறைந்த ஓய்வு தேவைப்படும்போது தன் பிள்ளைகளை அவர்தம் விருப்பங்களை, மனைவியுடன் அவசர முயக்கத்தை, அவனால் ஈடுபாட்டுடன் காட்ட இயலாது போகிறது.. அவன் அருமை தெரியா மனைவியின் அருமை பற்றி யாரேனும் புகழ்ந்தால்.., இப்படிதான் முடியும் ...

காமம் கொல்..
                       வாழ்வில் சிலருக்கென்று ஒரு மரியாதை கொடுப்போம்.. சில வேளைகளில் குடும்பத்தினருக்காக, பொதுவாக அப்பாவிற்காக சிலருக்கு மரியாதை கொடுக்க வேண்டிவரும்.. ஒரு புனிதன் தனக்குள் பொங்கி வழியும் காமத்திற்கு வடிகால் தேடும்போது அருவெருப்பைவிட அவன்மேல் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

ராமி,சம்பத்,துப்பாக்கி..
                                        சிங்கப்பூரில் பணி முடிந்து இல்லம் திரும்பிய போலீஸ்காரன் தன் காதலியுடன் கூடிக் களித்தபின் அவள் விளையாட்டாய் அவன் துப்பாக்கியை எடுத்து சுட, எப்பொதும் புல்லட் நிரப்பாமல் வைத்திருந்த அது அன்று நிரம்பியிருக்க காதலன் சொர்கத்துக்கு அல்லது நரகத்துக்கு போனான் காதலி  ஜெயிலுக்கு போனால் இது ஒரு உண்மை சம்பவம். இங்கு அதே கதை திகில் கூட்டி ...

மாம்பழ வாசனை .. 
                            காதல் ராட்ச்சதனமானது, கோழையானது, பயம் வந்தால் ஒளிந்து கொள்ளக் கூடியது.. எத்தகைய பாசத்தையும் முறித்துக்கொள்ளும் காதல் பைத்தியகாரதனமானது .. இந்தக் காதல் பிசாசின் காதல் ..

நண்டு ..
                ஒரு நடுத்தரவாசிக்கு பெரிய வியாதி வந்துவிட்டால் அவர்கள் படும் அவஸ்த்தை சொல்லிமாளாது... நிறைய பேர் சொத்தை இழந்து ரோட்டுக்கு வந்திருக்கின்றனர்.. சில பேர் வழியற்று நெருக்கமானவர்களை தொலைத்துவிட்டு நிம்மதியின்றி வாழ்வை கழிக்கின்றனர்.. அரசாங்க மருத்துவமனைகளில் சென்று சேர்க்க கூட வழியற்றவர்கள் நிறைய உண்டு, ஏனென்றால் அங்கும் கூட சில முக்கிய மருந்துகளை வெளியில்தான் வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதிலும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்க்கு ஐந்தோ, பத்தோ கொடுக்கவேண்டும் இல்லையென்றால் அவர்கள் வேண்டுமென்றே அலட்சியமும், தாமதமும் செய்வார்கள்... அப்படி மாட்டிகொண்ட வயதான பெரியவரின் சரியான பார்வை..

புத்தகம் கிடைக்கும் இடம் :
நாகரத்னா பதிப்பகம்.
3A , டாக்டர் ராம் தெரு,
நெல்வயல் நகர், பெரம்பூர்,சென்னை - 11

டிஸ்கவரி புக் பேலஸ் 
மேற்கு கே.கே.நகர் ,
சென்னை -78

விலை ரூ.50/- மட்டுமே.

23 கருத்துகள்:

shortfilmindia.com சொன்னது…

தலைவரே மிக்க நன்றி.. உங்கள் கருத்துக்கு.. ஒரு சின்ன திருத்தம்.. விலை ரூ.50.:)

கேபிள் சங்கர்

க ரா சொன்னது…

நல்ல விமர்சனம் செந்தில்.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா.

கேபிள் இன்னும் உயரம் செல்வார்.

பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

//ஒரு சின்ன திருத்தம்.விலை ரூ.50.:)//
திருத்திவிட்டேன் தலைவரே ..

//நல்ல விமர்சனம் செந்தில்//
நன்றி ராமசாமி கண்ணன்

///நல்லா எழுதியிருக்கீங்க நண்பா.
கேபிள் இன்னும் உயரம் செல்வார்.//

நன்றி சரவணகுமார் ... அவர் இயக்கிய படத்துக்கு நான் விமர்சனம் எழுதணும்.. இதுதான் ஆசையே...

ஜெய்லானி சொன்னது…

நல்ல கதைக்கு நல்ல விமர்சனம்..!!

கேபிள் இன்னும் உயர வாழ்த்துக்கள்//!!

நேசமித்ரன் சொன்னது…

ம்ம் நல்லா எழுதி இருக்கிங்க நண்பா நானும் ஒரு 5 மாசத்துக்கு முன்னாடி எழுதி இருக்கேன் :)

ஹேமா சொன்னது…

டக்கீலா தலையில் மெக்ஸிக்கானர் போல ஒரு தொப்பி போட்டிருப்பார்கள்.அதுவே ஒரு அழகு.
செந்திலின் விமர்சனத்திலேயே ஒரு கவர்ச்சி.

காமராஜ் சொன்னது…

செந்தில் எக்ஸ்பிரச் வேகத்தில் இருக்குது இந்த அறிமுகம்.அப்றம் டக்கீலா வை தோழர் கோணங்கி அறிமுகப்படுத்திக்கேட்டிருக்கிறேன்.அது படிக்கிறபோதே லேசா வெதுதுவெதுன்னு இருக்கு.

தமிழ் மதுரம் சொன்னது…

விமர்சனம் அருமை. இது புத்தகத்தைப் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தினை மென்மேலும் அதிகரிக்கிறது. தொடருங்கோ.

யாசவி சொன்னது…

//போதை வஸ்துகளில் டகீலாவின் குணம் வித்தியாசமானது, ஒரே கல்பில் அதை அடிக்கணும், முடித்தபின் உள்ளுக்குள் தீ பரவும் பரவசம் ஒரு கடவுள் அனுபவம்..//

Nice review.

கடவுள் அனுபவம் எல்லாம் அதிகம். Don't hype it please.

Karthick Chidambaram சொன்னது…

விமர்சனம் அருமை. இன்னும் படிக்கவில்லை. படிக்கவேண்டும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

உங்கள் விமர்சனத்துக்கு பிறகு எனக்கு புத்தகம் வாங்க ஆசை. நாம நேர்ல பேசுவோம். நன்றி

மரா சொன்னது…

நல்ல பகிர்வு. கேபிள் சங்கர் சென்னைவாசிதானா? சீக்கிரம் சந்திக்கனும்ணே.

Cable சங்கர் சொன்னது…

//நல்ல பகிர்வு. கேபிள் சங்கர் சென்னைவாசிதானா? சீக்கிரம் சந்திக்கனும்ணே//

mayil.raavananan அண்ணே.. வணக்கம்..!!

சௌந்தர் சொன்னது…

நல்ல கதைக்கு நல்ல விமர்சனம்

Sukumar சொன்னது…

நல்ல பகிர்வு... நன்றி..

தமிழ் உதயம் சொன்னது…

படைப்பாளிகளுக்கு இம்மாதிரியான விமர்சனங்களே - தொடர்ந்து சிறப்பான படைப்புகளை தர உதவும்.

நாடோடி சொன்னது…

ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம் செந்தில் அண்ணே.... நானும் வாங்கி ப‌டிக்க‌ வேண்டும்..

வால்பையன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி தோழரே!

பெயரில்லா சொன்னது…

புகைப்படத்தை பார்த்துவிட்டு பயந்துவிட்டேன்..
படித்ததும் தேற்றிக்கொண்டேன்...
நல்ல விமர்சனம்..

pichaikaaran சொன்னது…

ஒரு நல்ல படைப்பாளி, நல்ல மனிதராகவும் இருப்பது மிகவும் அரிது...

ஒரு நல்ல புத்தகத்தை பற்றி , நல்ல விமர்சனம் தந்ததற்கு நன்றி ...

நல்ல புத்தகம் தந்த நல்ல மனிதர் கேபிள் சங்கருக்கும் நன்றி

Unknown சொன்னது…

விமர்சனம் படித்தவர்கள் ..

ஜெய்லானி

நேசமித்திரன்

ஹேமா

காமராஜ்

தமிழ் மதுரம்

யாசவி

கார்த்திக்

ரமேஷ்

மயில் ராவணன்

சௌந்தர்

சுகுமார் சுவாமிநாதன்

நாடோடி

வால்பையன்

இந்திரா

பார்வையாளன்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...

Swengnr சொன்னது…

சாண்டில்யன், பாக்கியராஜ் இவர்கள் எல்லாம் கொஞ்சம் அந்த மேட்டரை சேர்த்துத்தான் எழுதுவார்கள். ஆனாலும் நல்லா இருக்கும். கேபிள் சாரும் அப்படிதான். மிக்ஸ்சிங் மிக சரியா பண்றார். நானொரு நீண்ட நாள் ரசிகன்!