6 ஜூன், 2010

லீ குவான் யூவுக்கு ஒரு சல்யூட் ..


இலங்கை அரசியலை விமர்சிக்க இப்போது யாரும் தயாராக இல்லை.. பெரும்பாலும் பக்க சார்பான அறிக்கைகளோ அல்லது மௌனங்களோ மட்டுமே அனைத்து நாட்டு அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது...

இந்தியாவில் தமிழகம் தாண்டி எந்த அரசியல்வாதியும் ராஜபக்சேவை கண்டிக்கவே இல்லை. மாறாக ராஜபக்சே வந்து திருப்பதியில் சாமி கும்பிட்டுப் போக பாதுகாப்பு அளித்த  தேசம் நம் தேசம், அருகில் இருக்கும் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா இரண்டும் வாயையே திறக்கவில்லை. கேரளா சொல்லவே வேண்டாம்.. ஒவ்வொரு தமிழன் சாவுக்கும் மகிழும் சாத்தான்கள்.. வட இந்தியாவைப் பொறுத்தவரை பஞ்சாப் தலைவர்கள் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளும் பொதுவான அறிக்கைகளே சொன்னது. சமீபத்தில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர், தற்போதைய மூத்த அமைச்சர் திரு. லீ குவான் யூ அவர்கள் ஒரு பேட்டியில் ராஜபக்சேவை கடுமையாக சாடியிருக்கிறார். அந்த பேட்டியின் மொத்தமும் படிக்க பாரிஸ் தமிழ் இணைய பக்கம் செல்லுங்கள்.

மலேசியா சிங்கப்பூரை தனியாக அனுப்பியபோது அது வெறும் மீன்பிடி கிராமம், மலேசியா அறிவித்தபோது அந்த நாடுளுமன்றத்தில் முடிவை மாற்றிக் கொள்ள மன்றாடினார். ஆனால் மலேசியா அரசு மறுத்து விட்டது. அன்று முதல் ஒரு சபதமாக சிங்கப்பூரை உலகில் கவனிக்கப் படும் நாடாக மாற்றிக் காட்டினார். அதற்கு அவருடன் உறுதுணையாக இருந்தது தமிழர்கள்..

அவரின் அறிக்கையில் மிகத் தெளிவாக தமிழர்களும்,சிங்களர்களும் இணைந்து வாழ சாத்தியம் இல்லை என சொல்லியிருக்கிறார். புலிகள் இல்லது ஆக்கப் பட்ட இப்போதைய சூழலில், தமிழகத்தில் கூட ஈழப் பிரச்சனைகளை பெரிய அளவில் மறக்கத் துவங்கி விட்டனர். ஆனால் உலக அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் சிங்கப்பூர் அரசின் மூளையாக இப்போதும் செயல்படும் திரு.லீ அவர்களின் கருத்து ஒரு புதிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது.

தமிழனுக்கான குரல் இப்போதுதான் சரியான திசையில் ஒலிக்க துவங்கி இருக்கிறது.. விரைவில் மாற்றம் வரும் என நம்புவோம்.. 

20 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிச்சியம் நல்லது நடக்கும்

Unknown சொன்னது…

மன்னிக்கவும்..

பதிவில் இணைத்த படங்களை நீக்கிவிட்டு மீண்டும் இணைத்ததால் இருமுறை வந்துவிட்டது..

முதல்முறை பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய நேசமித்திரன் சாருக்கு ஒரு சல்யூட் ...

ஜெய்லானி சொன்னது…

இதை விட ஒரு இந்தியனுக்கு அவமானமில்லை. நான் ஒரு இந்தியன்னு சொல்லவே வாய் கூசுது,

லீ வுக்கு ஒரு ராயல் சல்யூட்

மதுரை சரவணன் சொன்னது…

லீ க்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி. நமக்கு விடியல் உண்டு.

Bibiliobibuli சொன்னது…

ஈழத்தமிழர்களின் உண்மையான நிலை உலகம் முழுதும் அறியும். ஆனால், எல்லா நாடுகளும் தங்கள் சொந்த அரசியல் நலன் கருதி நேர்மையற்ற விமர்சனங்களையே செய்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஒருவராவது உண்மையை பேசுவது சந்தோசம்.

ஹேமா சொன்னது…

அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தமிழனின் வாழ்வு நம்பிக்கைகளின் கைகளில் மட்டுமே !

ஜோதிஜி சொன்னது…

அன்றும் இன்றும் என்றும் ஐயா லீ குவான் என்னுடைய ஆதர்சன தலைவர்.

Chitra சொன்னது…

விரைவில் மாற்றங்கள் வர வேண்டும்..... வாழ்த்துகிறோம்!

Unknown சொன்னது…

சல்யூட்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


ஜெய்லானி

மதுரை சரவணன்

Rathi

ஹேமா


ஜோதிஜி

Chitra

Unknown சொன்னது…

லீ க்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி. நமக்கு விடியல் உண்டு

காமராஜ் சொன்னது…

உலகின் எந்த மூலையில் கொடுமை நடந்தாலும். கோபப்படுகிற தோழர்களுக்கு சல்யூட்.

ரெட் சல்யூட்.

nagoreismail சொன்னது…

"சமீபத்தில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர், தற்போதைய மூத்த அமைச்சர் திரு. லீ குவான் யூ அவர்கள்.."

- திரு. லீ குவான் யு - மூத்த அமைச்சர் அல்ல அவர் 12 ஆகஸ்ட் 2004 முதல் "மதியுரை அமைச்சர்" - "Minister Mentor"

Unknown சொன்னது…

சல்யூட்....

kumar


காமராஜ்

Unknown சொன்னது…

சல்யூட்....

//- திரு. லீ குவான் யு - மூத்த அமைச்சர் அல்ல அவர் 12 ஆகஸ்ட் 2004 முதல் "மதியுரை அமைச்சர்" - "Minister Mentor"//

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நாகூர் இஸ்மாயில் ...

செந்தில்குமார் சொன்னது…

திரு. லீ குவான் யு
பற்றி நானும் நிரைய கேள்விபட்டிருக்கிரேன்
நல்ல தலைவர் சிந்தனைவாதியிம் கூட

நம் நாட்டிலும் ம்ம்ம்ம் ம் சொல்லவா வேண்டும்
பணத்தலைவரும் மனசிந்தனைவாதியிம்
எப்படி வரும் ஞாபகம் நீங்கள் சொல்வதுபோல மறந்து விடுவார்கள்

திரு. லீ குவான் யு
தமிழ் இதயங்களின் வாழ்த்துக்கள்

nagoreismail சொன்னது…

You are most welcome Sir

சௌந்தர் சொன்னது…

தமிழனுக்கான குரல் இப்போதுதான் சரியான திசையில் ஒலிக்க துவங்கி இருக்கிறது.. விரைவில் மாற்றம் வரும் என நம்புவோம்

seguvara மாதரி ஒரு ஆள் இருக்கவேண்டும்

அன்புடன் நான் சொன்னது…

திரு லீ ஒரு கம்பீரமான அரசியல்வாதி.
அவரின் கருத்து நேர்மையின் வடிவம்.

பகிர்வுக்கு நன்றிங்க செந்தில்.

Unknown சொன்னது…

சல்யூட்....

செந்தில்குமார்

soundar

சி. கருணாகரசு

பெயரில்லா சொன்னது…

எந்த லீ குவான் வந்தாலும் நம்ம கருனாநிதிஜி, சோனியாஜி, சிங்ஜி, காங்கிரஸ்ஜிக்கள் எவரையும் திருத்த முடியாது. கடைசி ஈழத்தமிழன் சாகிற வரை ராஜபக்சவும் திருந்தமாட்டான்.

புள்ளிராஜா