24 ஜூன், 2010

கீர்த்தனாவும், கெடா வெட்டும்..

எல்லாவற்றையும் வெவரமா  சொல்லணும் பெரிய அத்தைக்கு 
நடு மாமா தண்ணி  போட்டால் மட்டும் தகராறு
பங்காளிக அத்தனை பேருக்கும் ஆளனுப்பி சொன்னா போதும் 
மாமா வகையறாக்களுக்கு நேர்ல போய் கூப்பிடனும் 
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி எல்லாத்தியும் வாங்கி வந்தபெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு 
சித்தி பாவம் எதை சொன்னாலும் கேட்டுக்கும்

இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும் கறி பத்தல 
தண்ணி அடிச்சுட்டு, ரகள செஞ்சு, சவால் விட்ட சொந்தம் 
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருப்பார் 
செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் அதே கொறைதான்..
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல 
ராமாசாமி மாமா மொறைக்க 
கல்யாண வீடு கதிகலங்கி போச்சு..

கூடப் படிச்ச மாமா பொண்ணு கீர்த்தனா  பேசவே இல்ல 
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல 
அதாச்சு வருசம் ரெண்டு ..

நேத்தைக்கு பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்கு போனா 
மாமென்காரனுக்கு  டீ ஊத்திக்  கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல 
கடந்து போன மாமேம்பொண்ணு கீர்த்தனா வெக்கபட்டா பாருங்க 
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு 
குலதெய்வத்துக்கு இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு வேண்டிகிட்டேன் ...
 

23 கருத்துகள்:

க ரா சொன்னது…

சூப்பரு.

Unknown சொன்னது…

sooooooooooooooooooooparuuuuuuuuuuuuuuu

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு செந்தில்.. ஆமா எல்லோரும் வேண்டிக்குவோம்.,சாதிமத வேறுபாட்டை மறந்தபடி...

ஜோதிஜி சொன்னது…

மிகவும் ரசித்த வாழ்க்கையின் கவிதை.

கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது வாழ்க்கை.

வார்த்தைகளாக படிப்பவர்களுக்கு மட்டும் தான் இது கவிதை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு
குலதெய்வத்துக்கு இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு வேண்டிகிட்டேன் ...///

enakku priyaani

நாடோடி சொன்னது…

கிராம‌ நிக‌ழ்வு..... ந‌ல்லா இருக்கு..

Santhappanசாந்தப்பன் சொன்னது…

அருமையா இருக்கு தலைவரே

நேசமித்ரன் சொன்னது…

அந்த புழுதி வாசம் மாறாத வரிகளில் கிறங்கித்தான் போனேன் தோழா

Chitra சொன்னது…

Fantastic! :-)

ராஜ நடராஜன் சொன்னது…

டவுனு பஸ்சு சுத்தி ஊர் சுத்தி
கெடான்னே தமிழ் சினிமாத்தான்
தலையக் குழுக்கி பார்த்துக்கோன்னு
சொல்லிச்சு.

எழுத்துல கெடா வெட்டுறத இப்பத்தான்
பார்க்கிறேன்.

ஹேமா சொன்னது…

வேண்டுதல் நிறைவேறட்டும் செந்தில்.மனுஷ மனங்களும் மாறாமல் இருக்கட்டும்.கிராம வாசனையோடு அழகு தமிழ்க் கவிதை.

Karthick Chidambaram சொன்னது…

கிராம வாசம் - மிகவும் அருமை.
இப்படி எழுத்திலேயே கிட்ட விடறீங்களே ....
சூ.. ப்ப.. ர்

VELU.G சொன்னது…

மிக மிக ரசித்தேன் super செந்தில்

Swengnr சொன்னது…

அடிச்சாலும் புடிச்சாலும் பாசக்கார மக்கா பொண்ணு கொடுத்து உறைமுறை போவாம பாத்திருச்சே!

pichaikaaran சொன்னது…

one of best writings in recent days... great

ஜெயந்தி சொன்னது…

இதுதான் வாழ்க்கை.

க.பாலாசி சொன்னது…

//ஜோதிஜி சொன்னது…
மிகவும் ரசித்த வாழ்க்கையின் கவிதை.
கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது வாழ்க்கை.
வார்த்தைகளாக படிப்பவர்களுக்கு மட்டும் தான் இது கவிதை. //

வேறென்ன சொல்றது... அழகான வாழ்க்கையிது செந்தில் அனுபவிச்சவங்களுக்குத்தான் அந்த ஆழம் தெரியும்.. அருமை நண்பரே...

எல் கே சொன்னது…

avv appa seeekiram marraigea ??

Ahamed irshad சொன்னது…

அருமைங்க...

vasan சொன்னது…

க‌டா வெட்டியில், க‌ல்யாண‌ங்க‌ளில் முறுக்கிக் கொள்ளும் கிட்ட‌த்து உற‌வு,
இழவு வீட்டில் இள‌கி, உருகும்.
உரிமையோடு.

Unknown சொன்னது…

கெடா வெட்டுக்கு வருகை தந்தவர்கள்..

இராமசாமி கண்ணண்

ஆண்டாள்மகன்

Starjan ( ஸ்டார்ஜன் )

ஜோதிஜி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

நாடோடி

சாந்தப்பன்

நேசமித்ரன்

சித்ரா

ராஜ நடராஜன்

ஹேமா

Karthick சிதம்பரம்

VELU.G

Software Engineer

பார்வையாளன்

ஜெயந்தி

க.பாலாசி

LK

அஹமது இர்ஷாத்

vasan

விருந்துக்கு வந்த அனைவருக்கும் மேலான நன்றிகள் ...

ரமேஷ் வீரா சொன்னது…

நடு மாமா தண்ணி போட்டால் மட்டும் தகராறு
பங்காளிக அத்தனை பேருக்கும் ஆளனுப்பி சொன்னா போதும்
மாமா வகையறாக்களுக்கு நேர்ல போய் கூப்பிடனும்
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி எல்லாத்தியும் வாங்கி வந்தபெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு
சித்தி பாவம் எதை சொன்னாலும் கேட்டுக்கும்


இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும் கறி பத்தல
தண்ணி அடிச்சுட்டு, ரகள செஞ்சு, சவால் விட்ட சொந்தம்
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருப்பார்
செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் அதே கொறைதான்..
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல
ராமாசாமி மாமா மொறைக்க
கல்யாண வீடு கதிகலங்கி போச்சு..


கூடப் படிச்ச மாமா பொண்ணு கீர்த்தனா பேசவே இல்ல
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல
அதாச்சு வருசம் ரெண்டு ..


நேத்தைக்கு பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்கு போனா
மாமென்காரனுக்கு டீ ஊத்திக் கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல
கடந்து போன மாமேம்பொண்ணு கீர்த்தனா வெக்கபட்டா பாருங்க
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு
குலதெய்வத்துக்கு இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு வேண்டிகிட்டேன்

annah athugai monai super,,,,,,, yaruna antha keer?........

Santhini சொன்னது…

நான் முதன் முதலாய் படிக்கிற....அழகான, ரத்தவாசமும், பாசமும் வீசும் கிடாவெட்டு கவிதை.
எத்தனை கிடாவெட்டுகள் பார்த்திருப்பினும் ஒருமுறை கூட அதுகுறித்து கவிதை எழுத தோன்றியதில்லை.
ஊருக்கு இழுத்துப்போய் போட்டுவிட்டீர்கள்.