14 ஜூன், 2010

பேய்களின் கதைகள் ....


நிசப்த இரவின் தனித்த பயணங்களில் 
எதிர்ப்படும் பேய்களின் கதைகள் புனிதமானவை..
துணைக்கு வரும் அவற்றின் துயரங்கள்  
கண்ணீராலும்.. ரத்தத்தாலும் எழுதப்பட்டவை..

வழியை மறிக்கும் ரத்தக் காட்டேரிகள் 
கட்டாயப் படுத்தி சொல்லப்படும் புனைவுகளில்
வீரம் மிகுந்த வரலாறு கோழைத்தனமாக ..

சுடுகாட்டில் அப்போதுதான்  சாம்பலான பிசாசுகள் 
சொந்தங்களின் துரோகம் சொல்லி ஆறுதல் தேடும்.. 

புளியமரப் பேய்களோ 
தூக்கில் தொங்கும் அவஸ்தை பற்றி 
வெளி வந்த நாக்குடன் குழறும்..

விபத்தில் மரணமுற்றவை கதைகள் 
பயங்கரமானவை
கடைசி வினாடியில் ஒரே வலி..

இப்போதும் துரத்துகின்றன 
கொலையான பேய்கள் 
செய்த பேய்களை..

கொள்ளிவாய்ப் பிசாசிடம் மட்டும் 
கவனமாய் இருங்கள் 
பிரித்தாளும் சூழ்சிகள் கொண்டவை..

எப்போதாவது அபூர்வமாய் 
தனித்த பயணத்திலோ, 
நடு நிசி கனவிலோ வரும் 
பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..

26 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

அவைகளிடம் எனக்கு பயமில்லை. மரியாதையுண்டு.
(உங்க கவிதையை படித்த பின்பு)

அன்புடன் நான் சொன்னது…

உங்க தேதி அமைப்பு தவறு என நினைக்கிறேன்.

dheva சொன்னது…

செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?

Unknown சொன்னது…

//உங்க தேதி அமைப்பு தவறு என நினைக்கிறேன்.//

நன்றி அண்ணே.. கவனிக்காமல் இருந்துவிட்டேன்..
இப்போது மாற்றி விட்டேன்..

//அவைகளிடம் எனக்கு பயமில்லை. மரியாதையுண்டு.
(உங்க கவிதையை படித்த பின்பு)//

பொதுவாகவே இறந்த ஒருவரின் அருகே தனியாக இருந்தால் அந்த உடல் நிச்ச்சயம் ஒன்றும் செய்யாது..

ஆனால் பயப்படுகிறோம்..

ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரை நம்புகிறோம்.. ஆனால் கொலை கூட சாத்தியம்..



மற்றபடி கவிதை ஒரு படிமம் அல்லது உருவகம் ...

Unknown சொன்னது…

//செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//

ஆமெனில் .. ஆம் . இல்லையெனில் இல்லை ..

ஜெய்லானி சொன்னது…

//பேய்களிடம்,
சிநேகமாக இருந்து பாருங்கள்
பேய்களின் புனிதம் அறிவீர்கள்..//

ஒரு பேய் குடுங்களேன் டெஸ்ட் பன்னிடலாம், மனுஷந்தான் ஒத்து வரதில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//
செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு உறையில ஒரே கத்திதான்

நாடோடி சொன்னது…

//சிநேகமாக இருந்து பாருங்கள்//

என்ன‌ அண்ணே ப‌ண்ண‌னும்.... ம‌ந்திர‌ம் ஏதாவ‌து க‌த்துக்க‌ணுமா?... அதையும் சொன்னீங்க‌னா ந‌ல்லா இருக்கும்...

தமிழ் உதயம் சொன்னது…

பேய்களின் கதைகள் மற்றும் பேய்களின் வகைகள்.

pichaikaaran சொன்னது…

நல்லவர்கள் போல் தோன்றும் சிலரின், " நர" கல் முகம் தெரிய வரும்போது , ஆணாதிக்க வெறி தெரியும்போது, அவர்கள் பேய்களின் கட்டுப்பட்டிற்குள் வந்து விட்டதாகவோ அல்லது பெயின் புனித முகம் கலைந்து விட்டதாக நினைத்து கொள்வேன்...

உங்கள் கவிதையின் உள்ளடக்கம் அருமை... சொல்லிய விதமும் அருமை...
ஆழமான இரு கவிதைகளுக்கு இடையே , போதுமான இடைவெளி விடும்மாறு கேட்டு கொள்கிறேன்... அதை பற்றிய விவாதம் முடிந்த பின் அடுத்த கவிதை எழுதவும்... அதுவரை , வேறு எதாவது எழுலாம அல்லவா..

Chitra சொன்னது…

பொதுவாகவே இறந்த ஒருவரின் அருகே தனியாக இருந்தால் அந்த உடல் நிச்ச்சயம் ஒன்றும் செய்யாது..

ஆனால் பயப்படுகிறோம்..

ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவரை நம்புகிறோம்.. ஆனால் கொலை கூட சாத்தியம்..


........ உண்மை....... மனதில் ஆழமாய் பதிய வைத்து விட்ட கருத்து.

Unknown சொன்னது…

//ஒரு பேய் குடுங்களேன் டெஸ்ட் பன்னிடலாம், மனுஷந்தான் ஒத்து வரதில்லை.//

நன்றி ஜெய்லானி .. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?.



//செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு உறையில ஒரே கத்திதான்//

நன்றி ரமேஷ் .. இருடி அட்ரெஸ் கிடைக்கட்டும் ..



//என்ன‌ அண்ணே ப‌ண்ண‌னும்.... ம‌ந்திர‌ம் ஏதாவ‌து க‌த்துக்க‌ணுமா?... அதையும் சொன்னீங்க‌னா ந‌ல்லா இருக்கும்.//

நன்றி நாடோடி .. அதெல்லாம் கல்யாணம் ஆனா தானா வரும் ..



//பேய்களின் கதைகள் மற்றும் பேய்களின் வகைகள்//

நன்றி நாடோடி.. மனிதர்கள், கதைகள், வகைகள்



//உங்கள் கவிதையின் உள்ளடக்கம் அருமை... சொல்லிய விதமும் அருமை...
ஆழமான இரு கவிதைகளுக்கு இடையே , போதுமான இடைவெளி விடும்மாறு கேட்டு கொள்கிறேன்... அதை பற்றிய விவாதம் முடிந்த பின் அடுத்த கவிதை எழுதவும்... அதுவரை , வேறு எதாவது எழுலாம அல்லவா..//

நன்றி பார்வையாளன்.. இனி மாற்றிக்கொள்கிறேன்..



//........ உண்மை....... மனதில் ஆழமாய் பதிய வைத்து விட்ட கருத்து.//

நன்றி சித்ரா.. எல்லாம் பயம்தான் காரணம் ..

ஜெயந்தி சொன்னது…

//செந்தில் அண்ணன் இருக்கும்போது இதென்ன கேள்வி. ஒரு உறையில ஒரே கத்திதான்//
:)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

(:

சௌந்தர் சொன்னது…

dheva சொன்னது…
செந்தில்....@ நிஜமாவே... பேய் இருக்கா?//

@dheva கடவுள் இருந்த பேய் இருக்காதா என்ன

AkashSankar சொன்னது…

ஐயையோ! மணி இரவு 12 இப்ப போய் உங்க ப்ளோக படிக்க வந்துட்டேனே...

vasan சொன்னது…

த‌ன‌க்கென‌வே அலையும் ப‌ணப்பேய்க‌ளை விட‌,
த‌னித்த‌லையும் பேய்க‌ள் 'பெட்ட‌ர்' தான்.

ஹேமா சொன்னது…

செந்தில் பேய் பிசாசுன்னு ஏன் பயம் காட்டிக்கிட்டு...!ஐயோ...இண்ணைக்கு ராத்திரிக்கு வாறப்போ எந்த வெள்ளைக்காரப் பேய் என் பின்னால வரப்போகுதோ...கடவுளே !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நன்றி நாடோடி .. அதெல்லாம் கல்யாணம் ஆனா தானா வரும் ..//

veettula paththa vachchiduvom

Asiya Omar சொன்னது…

ஆராய்ச்சி எல்லாம் பண்ணி முடிவுக்கு வந்தாச்சுபா,இப்ப போய் பேய் இருக்கான்னு கேட்டுகிட்டு,இருக்குன்னு நினைச்சா இருக்கு,இல்லைன்னு யாரு சொன்னா?

Unknown சொன்னது…

பேய்களை புரிந்துகொண்டவர்கள்...

நன்றி ஜெயந்தி ..

நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி சௌந்தர் .. அப்ப கடவுள் இருக்குன்னு சொல்றீங்களா?

நன்றி ராசராசசோழன் .. பயப்படாமல் பேசிப்பாருங்கள் ..

நன்றி வாசன் சார்.. உங்கள் கருத்தே என்னுதும் ..

நன்றி ஹேமா .. வெள்ளைகாரர்கள் அதிகம் பாரா நார்மல் விசயங்களை நம்புவார்கள் ..

நன்றி ஆசியா ஓமர் .. பேய்கள் இருக்கு என்கிறீர்கள் எனில் .. உங்கள் அனுபவத்தை ஒரு பதிவாக எழுதுங்கள் ...

வாசித்த.. அனைவருக்கும் நன்றி ...

VELU.G சொன்னது…

வித்தியாசமான சிந்தனை செந்தில்

Syed Vaisul Karne சொன்னது…

I am so happy to see your readers base continue to grow gradually. Keep rocking..

வால்பையன் சொன்னது…

ட்ரை பண்றேன்!

செந்தில்குமார் சொன்னது…

ஒன்றும் இல்லை என்பதுதான் பேய்ய்ய்.....

மனப்பேய்....செந்தில்

பனித்துளி சங்கர் சொன்னது…

கவிதையிலும் பயத்தை அறிகிறேன் முதல் முறையாக . புகைப்படம் மிகவும் அருமை அதிக நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன் . பகிர்வுக்கு நன்றி