2 மார்., 2011

சென்னை தமிழ் வலைப்பதிவர் குழுமம்...


சென்னை பதிவர்கள், ஈரோடு வலைப்பதிவர் குழுமம் போல் நமக்கும் ஒரு குழுமம் இருந்தால் நிறைய விசயங்களை நாம் ஒரு குழுவாக செய்யலாம் என ஆர்வமாக இருக்கவும், மிகப்  பெரும்பாலான பதிவர்களின் சம்மதத்துடன் இன்று முதல் சென்னை வலைப்பதிவர் குழுமம் ஆரம்பமாகிறது..

இணைவதற்கு விருப்பமுள்ள சென்னை வலைப்பதிவர்கள் தங்களின் முழு விபரங்களை மின்னஞ்சலாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெயர் (உண்மையான), முகவரி, மொபைல் எண் ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.

வெளியூர் பதிவர்களும் இதில் ஆர்வம் இருப்பின் இணைந்துகொள்ள வரவேற்கிறோம்..


குழுமத்தின் வலைப்பக்கம் : சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் 

ஏற்கனவே குழுமத்தில் இணைந்துள்ள சென்னைப் பதிவர்களும் மீண்டும் ஒருமுறை தங்கள் விபரங்களை சரிபார்த்து, விடுபட்ட விபரங்களை நிரப்புமாறு வேண்டுகோள் வைக்கிறோம்.

குழுமத்தின் சார்பாக மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று மாலை 6.௦௦00 மணிக்கு சர்வேதேசத் திரைப்படங்கள் 'ழ' பதிப்பகத்தின் சார்பாக திரையிடப்பட ஒரு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

குழுமத்தின் நடவடிக்கைகளை நாம் அடுத்த மாதம் நடக்கும், முதல் கூட்டத்தில் முடிவு செய்யலாம். 

உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டங்களாக தெரிவிக்கலாம். 

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில் 
(சென்னை தமிழ் வலைப்பதிவர் குழுமம் சார்பாக)  

44 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

நல்ல விசயம். ஆனா தேர்தல் வெச்சிராதீங்க..

Chitra சொன்னது…

Best Wishes!

க ரா சொன்னது…

Best Wishes !

நசரேயன் சொன்னது…

//நல்ல விசயம். ஆனா தேர்தல்
வெச்சிராதீங்க..//

ஏன் ஓட்டு போட முடியாதா ?

நசரேயன் சொன்னது…

Best Wishes !

பெயரில்லா சொன்னது…

சென்னை பதிவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகள்!

Unknown சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே

மாணவன் சொன்னது…

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

சுதர்ஷன் சொன்னது…

வாழ்த்துக்கள் :-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

Thanks...மற்றும் வாழ்த்துகள்!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

ஈரோடு வலைப்பத்திவர்கள் சார்பாக என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

Sriakila சொன்னது…

All the Best!

pichaikaaran சொன்னது…

good news....

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்...

CS. Mohan Kumar சொன்னது…

நல்ல விஷயம். ஆரம்பிச்சிடுங்க. மற்ற விஷயங்கள் போக போக முடிவாகும். தெளிவாகும்.

எல்லோரையும் ஒரே விதமான முடிவுக்கு கொண்டு வர முடியாது. போலவே எல்லோரையும் திருப்தி படுத்தவும் முடியாது. சில முணுமுணுப்புகள் இருந்தாலும் பரவாயில்லை. தொடருங்கள். நம்மோட மனது & கை சுத்தமெனில் மற்றவை பற்றி கவலை படாது தொடரலாம். ஈரோடு பதிவர் நண்பர்களிடம் கற்று கொள்ள நிறைய இருக்கு. ஈரோடை விட அதிக பதிவர்கள் சென்னையில் இருந்தும், அவர்கள் அளவு கூட செய்யாததற்கு காரணம் சிறு முணுமுணுப்புகளுக்கே அடங்கி போனது தான். இம்முறை அப்படி இல்லாமல் தொடர வாழ்த்துகள்

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துகள்!

THOPPITHOPPI சொன்னது…

சென்னை பதிவர் குழுமம் ஆரம்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பதிவர் குழுமம் அறிவிப்பில் சில மாற்றங்கள் தேவை என்று படுகிறது.

//குழுமத்தின் சார்பாக மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு சர்வேதேசத் திரைப்படங்கள் 'ழ' பதிப்பகத்தின் சார்பாக திரையிடப்பட ஒரு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.//

இது எதற்காக என்று தெரியவில்லை. வலைப்பதிவர்களை புதிதாக இணைய வைக்க கவருவதுபோல் உள்ளது, அதே நேரத்தில் வலைப்பதிவர்கள் சினிமா பின்பும் சினிமாக்காரர்கள் பின்பும் ஓடுவது சரிப்பட்டு வராது. இது பதிவர்களை உலகப்பட/ புதுப்பட விமர்சினம் எழுததான் தூண்டும். ஏற்கனவே அதுதான் நடந்து வருகிறது கொஞ்சம் சமுதாயத்தின் அக்கறை உள்ளவர்களை உருவாக்குவதாய், ஊக்குவிப்பதாய் அறிவிப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்.

இன்னொன்று குழுமம் உங்கள் தலைமையிலோ/ஒருங்கிணைப்பில் அல்லது உண்மைத்தமிழன் அவர்கள் தலைமையோதான் இப்போதிருக்கும் பதிவுலக நிலையில் சரிப்பட்டு வரும் என்று கருதுகிறேன். ஏன் என்றால் குழுமம் வலைத்தளம் கேபிள் சங்கரை மட்டுமே பின்தொடர்வதும் அவர் ஆபாச ஜோக்குகள் எழுதுவதை தொடர்வதும் எந்த அளவுக்கு சென்னை பதிவர் குழுமத்திற்கு மரியாதை சேர்க்கும் என்று தெரியவில்லை. கேபிள் சங்கர் குழுமத்தை வழிநடத்துவதில் சரியானவர்தான் ஆனால் புதிதாக வருபவர்களும், வாசகர்களும் குழுமம் சினிமாவுக்காகத்தான் தொடங்கப்பட்டது என்று கருதுவார்கள், அதே நேரத்தில் குழுமத்தை வழினடத்துபவரே ஆபாச ஜோக்குகள் எழுதுவதால் குழும உறுப்பினர்களை ஒழுங்கு படுத்தவோ தவறுகளை சுட்டிக்காட்டவோ முடியாமல் போய்விடும்.

//குழுமத்தின் நடவடிக்கைகளை நாம் அடுத்த மாதம் நடக்கும், முதல் கூட்டத்தில் முடிவு செய்யலாம். //

இதைத்தான் நீங்கள் முதலில் அறிவித்து இருக்க வேண்டும். சென்னை பதிவர் குழுமம் ஆரம்பிப்பதற்கான நோக்கம் என்ன என்று தெரிந்தால்தான் இணைபவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்.

சினிமா காட்டப்படும் என்ற கவர்ச்சி திட்டங்கள் வேண்டாம். கவர்ச்சியால் இணையும் 100 பேரை விட உண்மையான ஐந்து பேரே போதும் குழுமம் உண்மையான வளர்ச்சியை அடைய.

சினிமா காட்டுவதில் செய்யும் செலவை விட ஏதாவது விழிர்ப்புனர்வை ஏற்ப்படுத்தும் விதத்திலோ அல்லது யாருக்காவது உதவும் விதத்திலோ அறிவிப்புகளை விளியிடுங்கள் நிச்சயம் இது ஒரு நல்ல நிலைக்கு நம் குழுமத்தை இட்டு செல்லும், எடுத்துக்காட்டாக இருக்கும். பஜாரில் 20 ருபாய் கொடுத்தால் கிடைக்கும் DVD யை ஏன் குழுமம் ஆரம்பித்து பார்க்கவேண்டும்?. குழுமம் உண்மையாக செயல்பட மாதம்தோறும் என்னால் முடிந்த நிதி உதவியை செய்ய தயார்.

காமராஜ் சொன்னது…

நல்ல முயற்சி சிறப்பாக முன்னேற வாழ்த்துக்கள்

அடடா சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்

நல்ல விஷயம். ஆரம்பிச்சிடுங்க. மற்ற விஷயங்கள் போக போக முடிவாகும். தெளிவாகும்.

oru prvaiyalaraaga naan parthu sila sangadangalai ungalidam pagirndhu irundalaaum, cable sankar -in kothu parottavil naan itta comment ungalai valara cheyyave , indru neengal arivitha indha arivippu migavum mana magishchiyay alikiradhu. pathivargal ondru koodi oru puthiya udharanangalai padaikka iraivanai prathikkiren. vasagar santhippu onraiyum erpadu seyyungal.



jayavel
9840398398

பொன் மாலை பொழுது சொன்னது…

// பஜாரில் 20 ருபாய் கொடுத்தால் கிடைக்கும் DVD யை ஏன் குழுமம் ஆரம்பித்து பார்க்கவேண்டும்?.//
நியாயமான கேள்விதான். சகலத்திலும் ஏன் சினிமாவை கொண்டு செலுத்தவேண்டும்? இந்த கேள்வியே பலருக்கு பிடிக்காதுதான், சினிமா அவர்களுக்கு மட்டும் தொழிலாக இருக்கலாம் ஆனால் வரும் அனைவரும் அதனையே கட்டிக்கொண்டு ஏன் அழவேண்டும்? பொதுவான கருத்து ஒற்றுமையை உண்டாக்கும் வழியை பார்க்கவேண்டும். அந்த ஒற்றுமை உணர்வுதான் இங்கு இல்லை.
பிடிக்கவில்லை என்றால் Just ignore my views.

சசிகுமார் சொன்னது…

நல்ல விஷயம். தொப்பி தொப்பி சொல்வது போல் சினிமா காட்டுவது ஒரு மாதிரியாக தான் இருக்கு சார் வேறு ஏதாவது செய்யலாம்.

லெமூரியன்... சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்..!

:) :)

தொப்பி தொப்பி சொன்னதை நீங்கள் சற்று கவனத்தில் கொள்ளலாம்..!

pichaikaaran சொன்னது…

" சர்வேதேசத் திரைப்படங்கள் 'ழ' பதிப்பகத்தின் சார்பாக திரையிடப்பட ஒரு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது."

I welcome this..

This is great effort .

many people see kamalhaasan films, mishkin films and shakila films and come to the conclusion that films are bad for society..
no... there r lot of great films which we must watch.. and group viewing will be great experience...

and we need not stop with films..
in future , we can arrange soem other programe also..

so I kindly request to proceed with film screening...

pichaikaaran சொன்னது…

பஜாரில் 20 ருபாய் கொடுத்தால் கிடைக்கும் DVD யை ஏன் குழுமம் ஆரம்பித்து பார்க்கவேண்டும்?"

I kindly request this friend to come and feel that experience... then he will know the answere himself

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.

தம்பி தொப்பி தொப்பியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம்.

முதல் கூட்டத்தில் நாம் ஒரு முடிவை எட்டலாம்..

r.v.saravanan சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

கோவை எக்ஸ்பிரசில் டிக்கெட் கிடைக்கலீங்க:)

இந்த வண்டி எந்த பக்கமா போகுது?

அன்புடன் நான் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழர்.

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்

பெயரில்லா சொன்னது…

என்னைப்பொறுத்தவரை இது வலையுலகில் இன்னொரு அரசியல் கட்சி யாக மாறிவிடக்கூடாது, அவ்வளவுதான்.

R. Gopi சொன்னது…

வாழ்த்துகள்.

இந்தப் பின்னூட்டம் யாருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படுவது அன்று. என் மனதில் பட்டதை சொல்கிறேன். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது தெரிந்திருந்தாலும் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்.

‘on the fly’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போல போகப் போக ஒவ்வொன்றாக சரிசெய்து கொள்ளலாம். வேண்டிய விஷயங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். வேண்டாதவற்றை விட்டுவிடலாம். மோகன்குமாரின் பின்னூட்டத்தைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்.

சனி மாலை ஆறு மணி என்பது நல்ல தேர்வாகப் படுகிறது. மற்ற நாட்கள் என்றால் நிச்சயம் சிரமம்தான்.

சர்வதேசப் படங்கள் காண்பிக்கும் திட்டமும் சரி. தமிழிலும் நல்ல படங்கள் உள்ளன. இந்தியாவின் பிற மொழிகளிலும் நல்ல படங்கள் உள்ளன. அவற்றையும் திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வெறுமனே படத்தைப் பார்த்துவிட்டுக் கலைந்து செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது குறித்த புரிதல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.

சர்வதேசப் படங்கள் என்ற போர்வையில் ஆபாசம், வன்முறைக் காட்சிகள் நிறைய இருக்கும் படங்களைத் திரையிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்தப் படம் திரையிடப் படப்போகிறது என்பது கண்டிப்பாக moderate செய்யப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட விஷயங்கள் அடுத்தடுத்த பதிவர் சந்திப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும்:

பதிவர்களுக்கான code of conduct. இது குறித்த தீர்மானம் நிறைவேறினாலே பதிவுலகில் நடைபெறும் பாதி அடிதடி குறைந்துவிடும்.

பதிவர் சந்திப்பு குறித்த அழைப்புகள். நீங்கள் ஒரு திரைப்பட இயக்குநரைக் கூப்பிட்டு வைத்துப் பேசப் போகிறீர்கள் என்றால் அதைத் தனியாக நடத்துங்கள். பதிவர் சந்திப்பையும் அதையும் கலக்க வேண்டாம். மேலும் ஒரு சந்திப்பு என்பது வாசகர்கள், பதிவர்கள் என அனைவரும் வரக்கூடிய ஒரு நிகழ்வு. சந்திப்புகளில் minimum decorum மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரட்டைக் கச்சேரிகளை \ பிற சேட்டைகளை அந்தச் சந்திப்பிற்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம்.

இதுவரை திரைப்படங்களாக வந்த நாவல்கள், அவற்றின் குறை நிறைகள்.

அம்பேத்கர் (சமூகம்), மகிழ்ச்சி (நல்ல நாவல்களை அடிப்படையாக் கொண்ட படங்கள்) போன்ற படங்களின் விமர்சனம் (படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் நிச்சயம் வரவேண்டும். நல்ல நாவல்கள் திரைப்படமாவதில்லை என்று நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் வந்த படங்களை விமர்சிக்க வசதியாக மறந்துவிடுகிறோம்.

குழுமத்தின் முக்கிய நோக்கம் என்ன என்பது இதுவரை என்னவென்று தெரியவில்லை. பாதகமில்லை. பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சீக்கிரம் நோக்கம் என்னவென்று சொல்லிவிட்டால் நல்லது. பலரும் இது குறித்துக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் அல்லவா? என்னைப் பொறுத்தவரை ஒரு காரியத்தைக் தனியாகச் செய்வதை விடக் கூட்டாகச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்றால் மட்டுமே குழுமம் தேவைப்படுகிறது. என்னால் ஒரு திரைப்படம் தனியாகப் பார்க்கமுடியும். ஆனால் அது குறித்து விவாதிக்க ஒரு குழு தேவைப்படுகிறது.

தமிழில் வெளிவந்த நல்ல நாவல்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

குழுமத்தின் வலைப்பதிவில் எல்லாப் பதிவர்களின் நூல் வெளியீடு விழா குறித்த விவரங்கள் பதிவாக வரவேண்டும்.

எழுத்தாளர்களுக்கு விருது (உதாரணம் நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது குறித்து) கிடைக்கும்போது குழுமம் சார்பாக அந்த எழுத்தாளரைக் கவுரவிக்க வேண்டும். குறைந்தபட்சம் அது குறித்த பதிவுகள் குழுமத்தின் வலைப்பதிவில் இடம்பெற வேண்டும்.

#tnfisherman சம்பந்தமான பதிவுகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதுபோன்ற வேறு சமூக அக்கறை கொண்ட பதிவுகளும் நிச்சயம் இடம்பெற வேண்டும். இது குறித்துப் பதிவர்கள் என்ன செய்யலாம் என்பது விவாதிக்கப்பட வேண்டும்.

இப்போதைக்குத் தோன்றுபவை இவை மட்டுமே. மேலும் ஏதேனும் தோன்றினால் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் வாழ்த்துகள்.

குறிப்பு: குழுமம் பின்தொடரும் ஒரே பதிவர் கேபிள் சங்கர். குழும வலைப்பதிவு யாரையும் பின்தொடரவேண்டாம் என்பது என் எண்ணம். கேபிள் சங்கருக்கு ஒரு பின்தொடர்பவர் குறைவதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடப்போவதில்லை என்று நினைக்கிறேன்:-)

ஜானகிராமன் சொன்னது…

இனிய செந்தில். மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் ப்ளாக்கஸ் போரம் ஏறக்குறைய இதே காலகட்டத்தில் ஒரு ஆண்டுக்கு முன்னால் கேபிள் அவர்களின் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்டது.முதல் சில மாதங்கள் ரொம்ப ஆக்டிவாக செயல்பட்டு, பின்னர், நம்முடைய பதிவுகளின் விளம்பரப்பலகையாகி, பின்னர் சண்டை சச்சரவுகள் எழுந்து பல ஆக்கப்பூர்வ பதிவர்கள் வெறுத்து வெளியேறி (நீங்களும் தான்) இப்போது ஏறக்குறைய எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் இருக்கிறது. என்னளவில் இதற்கு அடிப்படைக்காரணம் ஒருங்கிணைப்பாளர் தம்முடைய நேரமின்மையால் / விருப்பமின்மையால் தமிழ்ப்ளாகர்ஸ் போரத்தை சரியான திசையில் கொண்டு செல்லத் தவறியதே என்பது என் கருத்து. அதைப்போல இந்த குழுமமும் ஆகிவிடக்கூடாது. பெரிய எதிர்பார்ப்புகள் திட்டங்கள் கூட நமக்கு தேவையில்லை. பரஸ்பர நட்பை முன்னெடுத்து, நடுநிலையுடன் செயல்படும் குழுமத்தை எதிர்பார்க்கிறேன். இதற்கு தனிப்பட்ட நேரமும், ஆற்றலும் தேவைப்படலாம். அது உறுதிசெய்யப்படுமென்றால் நிச்சயம் சென்னை த.வ.ப.கு அற்புதமான அமைப்பாக மலரும். நன்றி.

Romeoboy சொன்னது…

செந்தில் சென்னை தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்று புதிதாக குழுமம் ஆரமிச்சு உள்ளோமா ?? அப்படி இல்லையை என்னில் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் பெயரை சென்னை வலைப்பதிவர் குழுமம் என்று மாற்றிவிடலாமே.. நீங்கள் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் இல்லை என்று கேள்விபட்டேன் அது உண்மையா ??

ஈரோடு கதிர் சொன்னது…

நீண்ட நாட்களாய் நினைத்துக் கொண்டிருப்பது!

செம்மையாக நடக்கட்டும்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

//சந்திப்புகளில் minimum decorum மீறப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரட்டைக் கச்சேரிகளை \ பிற சேட்டைகளை அந்தச் சந்திப்பிற்கு வெளியில் வைத்துக்கொள்ளலாம்//.
Very Well said Gopi. தான்தான் தமாசுக்கு தலைவர் என்பது போல ஒருவர் நொடிக்கொரு முறை பதிவர் சந்திப்பில் ஜோக்கடித்து(???) நிகழ்ச்சியை கெடுத்துவிட்டார். அடுத்த முறை இவரின் மொக்கையை தாங்க இயலாது எங்களால்.

Unknown சொன்னது…

கோபி அவர்களின் கருத்தினை ஏற்றுக்கொள்கிறேன்.

முதல் கூட்டத்தில் அனைத்தையும் விவாதிப்போம்...

Unknown சொன்னது…

//"சென்னை தமிழ் வலைப்பதிவர் குழுமம்...//

நல்ல தொடக்கம்..

தரமிக்க விஷயங்களின் தொடக்கமாக, ஆரம்ப புள்ளியாக இந்த குழுமம் இருக்கட்டும்..
நீங்கள் பொதுவான ஆள் என்பதால் எல்லா தரப்பு நல்ல விஷயங்களையும் மனதில் கொண்டு முடிவெடுங்கள்.

Unknown சொன்னது…

//சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் //

சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் என்றுதானே இருக்க வேண்டும்.
சென்னை தமிழ் என்பது வட்டார மொழி போன்று பொருள் கொள்ள கூடுமல்லவா?

தனி காட்டு ராஜா சொன்னது…

சென்னை-க்காக இதை நடை முறைபடுத்த முயற்சி செய்யுமாறு சென்னை பதிவர் குழுமத்துக்கு வேண்டுகோள்....

VOICE OF INDIAN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
VOICE OF INDIAN சொன்னது…

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்களாய் இருப்பபவர்களை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிட வேண்டாமே தோழர்களே!
என்ன சரியா ?

கிட்சுக்கே வெறிபிடித்து அலையும் நபர்களும் இருக்கின்றார்கள் அவர்கள்...................? ஜாக்கிரதை

நல்ல முயற்சி கூடுதல் நல்ல செயலுக்காக நல்ல நோக்கத்திற்காக இருந்தால் நலம்