4 மார்., 2011

பயோடேட்டா - தேர்தல் கூட்டணி ...

பெயர்                                  : தேர்தல் கூட்டணி
இயற்பெயர்                        : கொள்ளை(கை)க் கூட்டணி
தலைவர்                            : பெரீய்ய கட்சித் தலைவர்கள்
துணை தலைவர்              : சாதி மற்றும் சிறியகட்சித் தலைவர்கள்
மேலும் 
துணைத் தலைவர்கள்    : லெட்டர்பேட் கட்சிகள் (இதயத்தில் மட்டும் இடம் பிடிப்பவர்கள்)
வயது                                : ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வயது 
தொழில்                         : ஒற்றுமையாய் நாமம் குழைப்பதும், தனித்தனியாய் குழி பறிப்பதும்
பலம்                                 : சதவீதக் கணக்குகள்
பலவீனம்                          :மக்களின் மனக்கணக்குகள்
நீண்ட கால சாதனைகள் : கூசாமல் கொள்கை பேசுவது
சமீபத்திய சாதனைகள்   :தொகுதி உடன்பாடு எனப் பெயர் மாற்றியது
நீண்ட கால எரிச்சல்         : டெபாசிட்டுக்கு வக்கத்தவன்லாம் பத்து சீட்டு கேட்பது 
சமீபத்திய எரிச்சல்          : ஆட்சியில் பங்கும், குறைந்தபட்ச பொது செயல்திட்டமும்
மக்கள்                                : ஓட்டுப் போடும் 'மா'க்கள் 
சொத்து மதிப்பு                : ஒவ்வொரு சாதிக்கும் ஒன்றரைக் கோடிப்பேர்
நண்பர்கள்                          : கூட்டணியில் இருப்பவர்கள் அல்ல
எதிரிகள்                            : சீட்டு கிடைக்காத சொந்தகட்சிக்காரர்கள்
ஆசை                                : லோக்கல்ல 234, எஸ்.டி.டில 545
நிராசை                              : மைனாரிட்டி அரசு
பாராட்டுக்குரியது            : தேசியக்கட்சிகளின் கொட்டத்தை அடக்கியது
பயம்                                 : கருத்துக்கணிப்புகள்
கோபம்                             : தேர்தல் கமிஷன் மற்றும் "அப்ப அப்டி பேசுன, 

                                              இப்ப இப்படி பேசுற?" டைப் கேள்விகள்
காணாமல் போனவை    : வெட்கம், மானம், சூடு, சொரணை மற்றும் மாநில சுயாட்சி
புதியவை                        : புதிய இலவசங்களோடு வரப்போகும் தேர்தல் அறிக்கைகள்
கருத்து                             : நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்
டிஸ்கி                              : மறதி மன்னர்களான மக்களுக்கு எத்தனை டன் 

                                             வல்லாரை லேகியம் தேவைப்படுமோ?!!!!


அப்படியே இங்கிட்டும் கொஞ்சம் எட்டிப்பாருங்க..
காமராசரு ஆ(வ்வ்வ்வ்)ட்சியும் காங்கிரசூ கருமாந்திரங்களும்!


25 கருத்துகள்:

எல் கே சொன்னது…

நாமம்தான் மிச்சம்

Madhavan Srinivasagopalan சொன்னது…

//ஆசை : லோக்கல்ல 234, எஸ்.டி.டில 545 //

super

Madhavan Srinivasagopalan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஈரோடு கதிர் சொன்னது…

|| சொத்து மதிப்பு : ஒவ்வொரு சாதிக்கும் ஒன்றரைக் கோடிப்பேர் ||

இவங்க சொல்ற கணக்குக்கு 2340 தொகுதி வேணும்போல!

அஞ்சா சிங்கம் சொன்னது…

காணாமல் போனவை : வெட்கம், மானம், சூடு, சொரணை மற்றும் மாநில சுயாட்சி...............//////////////

மற்றும் பகுத்தறிவு வாதம்...............////////////////////////

Unknown சொன்னது…

//டெபாசிட்டுக்கு வக்கத்தவன்லாம் பத்து சீட்டு கேட்பது
லோக்கல்ல 234, எஸ்.டி.டில 545//



ஜூப்பரு..

Unknown சொன்னது…

//நிராசை : மைனாரிட்டி அரசு//

மைனாரிட்டி ஆட்சியில் சுயேட்சைகள் வரைக்கும் லாபம் தான்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

vasu balaji சொன்னது…

இவருக்கு ஒரு சீட்டு குடுத்து நிக்க வைக்கணும். என்னா லொள்ளு=)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sema sema

தமிழ் உதயம் சொன்னது…

பயோடேட்டா சொன்ன அத்தனையும் உண்மை.

அன்பரசன் சொன்னது…

//கருத்து : நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்//

சூப்பரு..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தேர்தல் கூட்டணி அவர்களின் பயோடேட்டா நல்லாவே பிழைகள் ஏதும் இல்லாமல் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

நல்லா சொல்லி இருக்கீங்க தலைவரே

எச்சத்துக்கு மிச்சமான மக்கள்

மாணவன் சொன்னது…

சரியான நேரத்தில் செம்மயா சொல்லியிருக்கீங்க அண்ணே

சூப்பர் :)

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

எல்லா வார்த்தைகளும், வாக்கியங்களும் செதுக்கப்பட்டவை.

settaikkaran சொன்னது…

இதுலே மட்டும் எல்லாருக்கும் ஒரே பயோடேட்டா பார்த்தீங்களா? அதான் அவங்க சிறப்பு! :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//தொழில் : ஒற்றுமையாய் நாமம் குழைப்பதும், தனித்தனியாய் குழி பறிப்பதும்//

...ஹ்ம்ம் எவ்ளோ உண்மை...சரியா சொல்லிருக்கிங்க

Unknown சொன்னது…

யார் வந்தாலும் நமக்கு கிடைக்கபோறது நாமம்தான். உருப்படியா யாரும் தென்படவே இல்லையே.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாசமா போரவனுங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நமக்கு நாமம்தான் மிச்சம்னு தெரிஞ்சிதான் மக்கள் அவனுக குடுக்குற பணத்தை வாங்குரான்களோ...

jayaramprakash சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
jayaramprakash சொன்னது…

அய்யனாரின் தொடர் நாவலை படித்திர்களா.இல்லை என்றால் படியுங்கள்.அதை "ழ" பதிப்பகம் வெளியிடலாம்.நல்ல வரவேற்ப்பு இருக்கும் முயற்சியுங்கள்.http://www.ayyanaarv.com/

Jana சொன்னது…

Superb Bro.

DR.K.S.BALASUBRAMANIAN சொன்னது…

super........