24 மார்., 2011

பயோடேட்டா - காங்கிரஸ்( தமிழ் நாடு கிளை) ...

பெயர் :இந்திய தேசிய காங்கிரஸ்( தமிழ் நாடு கிளை) 
இயற்பெயர் :பண்ணையார்களின் கட்சி 
தலைவர் :ஸ்பெக்ட்ரம் 
துணை தலைவர்கள் :சி.பி.ஐ 
மேலும் 
துணைத் தலைவர்கள் :வேட்டியைக் கிழிக்கும் எல்லாரும்  
வயது :சொந்தமாய் எழுந்து நடக்க முடியாத வயது  
தொழில் :தினம் டெல்லிக்கு எஸ்.டி.டி பேசுவதும், காமராசருக்கு
                         வருஷாப்பியம் கொண்டாடுவதும் 
பலம் :இன உணர்வற்ற தமிழர்கள்
பலவீனம்  :சுயமாக முடிவெடுக்க முடியாதது.
நீண்ட கால சாதனைகள் :தி.மு.க வை உடைத்து அ.தி.மு.க வை
                                                           உருவாக்கியது 
சமீபத்திய சாதனைகள் :63 தொகுதிகள் 
நீண்ட கால எரிச்சல் :கருணாநிதி 
சமீபத்திய எரிச்சல் :சீமான், தாமரை, கோவை.இராமகிருட்டிணன்
                                                   போன்றவர்கள் 
மக்கள் :தமிழர் அல்லாதவர்கள் 
சொத்து மதிப்பு :இதுல மட்டும் மத்த கட்சிக்காரனுங்க போட்டிக்கு
                                       வரவே முடியாது 
நண்பர்கள் :ராஜபக்க்ஷே கும்பல்
எதிரிகள் :இன்னும் திராவிடம் பேசுபவர்கள்                   
ஆசை :ஆட்சியில் பங்கு 
நிராசை :இம்முறை டெபாசிட் தேறாது 
பாராட்டுக்குரியது :ஆளே இல்லாமல் கட்சி நடத்துவது 
பயம் :தமிழ் பேசுற பயலுவ ஆப்ப சொருவிடுவானுவளோ?
கோபம் :ராஜீவ் காந்தியை கொன்னுட்டாங்க (இந்திராகாந்தி???)
காணாமல் போனவை :காந்தியம் 
புதியவை :கார்த்தி சிதம்பரமியம் 
கருத்து :இருங்க டெல்லிக்கு பேசிட்டு சொல்றோம்
டிஸ்கி        :நாப்பத்தஞ்சு வருசமா காவேரி, முல்லைப்பெரியார்,
                           தேவிகுளம்-பீர்மேடு, தமிழக மீனவன்,            
                           ஈழத்தமிழன்னு எதுக்காகவும், யாருக்காகவும் போராடாம
                          நோகாம நொங்கு தின்னது இனிமே நடக்காது சாமீய்...

20 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>துணைத் தலைவர்கள் :வேட்டியைக் கிழிக்கும் எல்லாரும்

செந்தில் அண்ணன் கோபக்காரர்தான்.. ஆனா நக்கல் அடிக்க ஆரம்பிச்சுட்டா.. ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>நிராசை :இம்முறை டெபாசிட் தேறாது
பாராட்டுக்குரியது :ஆளே இல்லாமல் கட்சி நடத்துவது

அக்மார்க் கே ஆர் பி டச்

Murugavel சொன்னது…

ஒவ்வொரு இடுகையிலும், உங்களின் கோபத்தை, கிண்டலும் நக்கலுமாய் வெளிப்படுத்துகிறீர்கள், தஞ்சை குசும்பு, நையாண்டி

தஞ்சை தமிழனின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்,

கி. முருகவேல்

பெயரில்லா சொன்னது…

/சமீபத்திய சாதனைகள் :63 தொகுதிகள் //

ரிசல்ட் வரும் முன்பே "சாதனை" என்று போட்டது என்ன நியாயம்? இந்தியா ஆஸ்திரேலியா ஆட்டம் பார்க்க நாட்டு மக்கள் ஆர்வமாக இருக்கும் வேளையில் தமிழன், உணர்வு போன்ற பரிட்சயம் இல்லாத "பிறமொழி" வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு என் கடும் கடும் கடும் கண்டனங்கள்.

-எங்க வழி தோனி வழி....

இலவச லாப்டாப் கையில் கிடைத்ததும் விரிவாக கருத்து போடுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
முதல் மழை//

உச்சி வெயில் மண்டைய பொளக்குது..போதாக்குறைக்கு அனல் பறக்கும் பிரச்சாரம் வேறு..... நீங்க முதல் மழைன்னு கமன்ட் அடிக்கறீங்க. ஆனாலும் உங்களுக்கு ரவுசு ஜாஸ்தி சார்.

Nagasubramanian சொன்னது…

உங்கள் நையாண்டி அருமை

vasu balaji சொன்னது…

இன்னும் அடிச்சாலும் தாங்குவானுங்க பாஸ்:)). கதரு கெட்டி

ரோஸ்விக் சொன்னது…

தமிழ்நாட்டுலே பல கிளை இருக்குதே இவனுகளுக்கு...

Chitra சொன்னது…

நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் காந்தியின் பொன்மொழிக்கும் காங்கிரஸ் கொள்கைக்கும் எத்தனை வேறுபாடுகள்!

பனித்துளி சங்கர் சொன்னது…

///////கோபம் :ராஜீவ் காந்தியை கொன்னுட்டாங்க (இந்திராகாந்தி???)
////////////

தலைவா ஏன் இந்த கொலை வெறி !?
நல்ல இருக்கு நண்பா

பனித்துளி சங்கர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sathish A சொன்னது…

>>பலம் :இன உணர்வற்ற தமிழர்கள்

உணர்வற்ற அடிமைகல்ன்னு சொன்ன சரியருக்கும்ன்னு நெனைக்கிறேன்

ஜோதிஜி சொன்னது…

கவலைப்பட வேண்டாம். வேறு எவரும் வெளியில் இருந்து வரத் தேவையில்லை. இந்த முறை தங்கபாலு அந்த காரியத்தை சுருதி சுத்தமாக செய்து கொண்டிருக்கிறார்.

Unknown சொன்னது…

தலைவரே எப்படி போட்டாலும் அருவாளில் இருந்து தப்பும் பிறவிகள்!

மாயாவி சொன்னது…

இதை படித்தவுடன் பழைய பிஞ்ச செருப்பால் சிலரை அடித்த திருப்தி கிடைத்தது. நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

காந்தியின் சொற்கள்... சலாம் வைச்சுக்கிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

//நண்பர்கள் :ராஜபக்க்ஷே கும்பல்//

காங்கிரஸோட வேட்டிய அவிழ்த்துப்புட்டீங்களே.

ராஜ நடராஜன் சொன்னது…

டிஸ்கி பலிக்கனும்.....

சின்னப்பயல் சொன்னது…

நோகாம நொங்கு தின்னது இனிமே நடக்காது

Unknown சொன்னது…

டிஸ்கி எப்படி பலிக்கும்னு நம்புறீங்க....? நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்... இனமான உணர்வற்ற தமிழர்கள் என்று... பின் எப்படி.. ஆனாலும் செந்திலும் இந்த பன்னாடைகளே விடவே கூடாது... இந்த முறை அடிக்கிற அடில.... தங்கபாலு தலையில இருக்கிற .. ஒண்ணு ரெண்டு முடி கூட இருக்ககூடாது....