20 மார்., 2011

காங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...


காங்கிரஸைத் தோற்கடிக்க வாருங்கள் என்று ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
பதிவுலகிலிருந்து பெருமளவில் யாரும் திரண்டு வராவிட்டாலும்கூட, இணைய வாசகர்கள், ட்விட்டர், முகப்புத்தகம் போன்றவற்றில் இயங்கும் நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியாக இருந்தது. பல நண்பர்கள் நேற்றுமாலை சென்னை தியாகராயநகரில் ஒன்றுகூடி "என்ன செய்யலாம்?" என்று கலந்தாலோசனை செய்தோம். நண்பர் பதிவர் கும்மி உடல்நலப் பிரச்சினைகளினால் நேரில் வரமுடியவில்லை எனினும் கூட்டம் எடுக்கும் முடிவுகளுக்கு தானும் உடன்படுவதாகச் சொன்னார்.

காங்கிரஸ் என்கிற கரையான்புற்றை தமிழகத்திலிருந்து இல்லாதொழிக்கும்
மிகப்பெரும் பணியில் தமிழ்தேசிய இயக்கங்கள், தமிழுணர்வாளர்கள், மனித
உரிமை ஆர்வலர்கள் ஆகியோர்களின் செயல்பாடுகளில் தமிழிணையவாசிகளான நாங்களும் சங்கமிப்பதை நாங்கள் பெருமிதமாக உணர்கிறோம்.

ஊர்கூடித்தான் தேர் இழுக்கவேண்டும். உதிரிப்பூக்கள் ஒன்றுசேர்ந்துதான்
மாலையாக வேண்டும்.

இன்று நாம் துவங்கி இருக்கிற சிறிய துவக்கம் நாளை பெரும் சூறாவளியாகச்
சுழன்று காங்கிரஸ் கட்சியை தமிழகத்துக்கு வெளியே வீசியெறிந்துவிடக்கூடும். அதற்கான முயற்சிகளில் தமிழ் இணைய வாசகர்கள்,பதிவர்கள், சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று இந்தப் பதிவினைப் படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்

நேற்றைய ஒன்றுகூடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-

1)காங்கிரஸுக்கு எதிரான புனிதப்போரில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் " நாம் தமிழர்" போன்ற இயக்கங்களுடன் இணைந்து அனைவரும் ஒருமித்து  
    வேலை செய்யலாம் என்றும்.

2). காங்கிரஸ் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் காங்கிரஸ்
எதிர்ப்பு ஆர்வலர்களை ஒன்று திரட்டி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யலாம் என்றும்.

3). இதற்கென பொதுவான tag ஆக ட்விட்டர் தளத்தில் நாம் அனைவரும் ஒரே tag -ஐ பயன்படுத்தலாம் என்றும்.

4).முகநூல்( facebook) மற்றும் ப்ளாக்கில் இதற்கென பொதுவான தளம் அமைத்து அல்லது ஏற்கனவே ட்விட்டர் தளம் போல யாராவது முன் மாதிரியாக இருந்தால் அதனை பின்பற்றுவது எனவும்

5)இப்போதைக்கு இதன் ஒருங்கினைப்பாளர்களாக நானும் (கே.ஆர்.பி.செந்தில்௦),
    ராஜாராமனும் (விந்தை மனிதன்) இருவரும் இயங்குவது எனவும் முடிவு
    செய்யப்பட்டது.

இந்த முடிவின் விபரங்களை ஆர்வலர்களிடம் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டோம்.

இது தொடர்பாக தகவல்கள் வேண்டுவோர்.

கே.ஆர்.பி. செந்தில் : +91-80988 58248
ராஜாராமன் (விந்தை மனிதன்) : +91-95007 90916    தொடர்பு கொள்ளலாம்...

18 கருத்துகள்:

dheva சொன்னது…

கிரேட்........அடிச்சு தூள் கிளப்புங்க செந்தில்! ஐ வில் ஷேர் திஸ் டூ அஸ் மச் அஸ் பாசிபில் டூ ஆல்..!

வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

உணர்வுபூர்வமாக இணைந்து கொள்கிறேன்.

raja சொன்னது…

நண்பர்களே நம வயதுகளை ஒத்த... ஒரு தேசிய கட்சியின் பிள்ளை நம் இனத்தையே திட்டமிட்டு அழிக்க உறுதுணையாக இருந்தார்.. உடன் அவரது தாயும் இந்திய அரசும். நாம் நமது சந்ததிகளை கொன்று குவித்தவர்களை நீதியின் முன் நிறுத்தவும், அம்பலபடுத்தவும் நமது நண்பர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவியாக இருப்பேன். நீங்களும் காங்கிரஸை தோற்கடிப்போம் எனும் போராட்டத்தில் இணைந்து நமது நண்பர்களின் கரத்தை வலுபடுத்துவேண்டும்.

Samy சொன்னது…

ungalil irunthu arambamakaddum.samy

சௌந்தர் சொன்னது…

காங்கிரஸ் பற்றி ஒரு பதிவை எழுதி அனைவரும் .....அவர் அவர் வலை தளத்தில் பதிவிடலாம் ...நீங்கள் ஒரு பதிவு போடுங்கள் நான் அதை எனது தளத்தில் பதிவிடுகிறேன் ....எனக்கு தெரிந்த அனைவருக்கும் மெயில் அனுப்புவோம்....முடிந்தால் அதை அனைவருக்கும் நோட்ஸ் அடிச்சு கொடுங்கள்....

settaikkaran சொன்னது…

முயற்சி வெற்றியடையட்டும். காங்கிரஸை தமிழ்நாட்டிலிருந்து துடைத்து எடுத்து அனுப்பிவிட வேண்டும்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

நானும் துணை நிற்கிறேன் நேற்று ஏன்னால் வரமுடியாமைக்கு வருந்துகிறேன் .......................

hitechramesh சொன்னது…

nanbargale naam mattum poraadinal pothathu ...ithu makkal iyakkamaga mara theintha nanabargalukku ovvoruvarum kurainthathu 10 sms annuppi athan mulama 49a pathuvu seithal thogithikku 1000 49a votes vanthale oru bayam varum...
atharkku muthalil thivira activist oru 100 nos lists thogithi variyaga pathivu cheyya anthantha paguthi bloggers lists avargal bloggil veliyudavum

Unknown சொன்னது…

காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு பொதுவாக தமிழகததில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சுந்தரவடிவேல் சொன்னது…

சமூக ஊடகங்களால் மாபெரும் மகுடங்கள் உருண்டோடிய நாடகங்கள் நம் மண்ணிலும் அரங்கேற வாழ்த்துக்கள்!

vinthaimanithan சொன்னது…

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு காங்கிரஸும் அவசியமற்றவை நண்பர்களே! விரட்டுவோம் காங்கிரஸை திருத்தணிக்கு அப்பால்!

கோவை சிபி சொன்னது…

100% correct.we will join.

ராஜவம்சம் சொன்னது…

+1
உங்கள் இருவரின் முயற்ச்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

காங்கிரசை தோற்கடிக்க முடியாது. நீங்க தான் தோற்க போறிங்க.

பெயரில்லா சொன்னது…

நாம் இணைவோம் ஒன்றாக காங்கிரஸ்ஐ தமிழ்நாட்டில் இருந்து வேரறுப்போம் . நானும் தயார். இன்றிலிருந்து தேர்தல் முடியும் வரை நாம் பதிவிடும் அனைத்து பதிவிலும் முதற் காரியமாக ஒரு லோகோ வை போட்டு அதன் கீழ் நான் துவங்குகிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை மற்றவர்களையும் செய்ய சொல்லுங்கள். இனி பதிவுலகில் படிக்கப்படும் ஒவ்வொரு பதிவிலும் ஈழதமிழர்களுக்கு இவர்கள் செய்த துரோகம் ஞாபகத்திற்கு வரட்டும்.

மாயாவி சொன்னது…

நானும் உணர்வுடன் இணைந்து கொள்கிறேன். மேலும் என் தொகுதியில் காங்கிரஸ் நிற்பதால் கண்டிப்பாக இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு காங்கிரஸின் தோல்வி வித்தியாசத்தை அதிகரிப்போம்.

மேலும் பதிவர்கள் அனைவரும் காங்கிரஸுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்பதை தங்கள் வலைபூவில் ஒரு லோகோவாக போடலாம்.

Santhappanசாந்தப்பன் சொன்னது…

காங்கிரஸை தோற்கடிக்க அணி திரள்வோம் வாரீர்!

பின்வரும் சுட்டியை சுட்டி, இணைத்து கொள்ளுங்கள்

Defeat Congress

மனசாலி சொன்னது…

மதுரையிலுறுந்து மனசாலி. நான் உங்களுடன் இனைவதை என் கடமையாக கருதுகிறேன். அடிப்படையில் தமிழ் என் தாய் மொழி அல்ல.
மொழியோ இனமோ எதுவாக இருந்தால் என்ன? மனிதம் ஒன்று தானே.அது எங்கே வதைப்பட்டாலும் குரல் கொடுக்க வேண்டியது நம் கடமையல்லவா?. அரசியல் காரணங்களுக்காக எல்லையில் இரு நாட்டை ரானுவத்தினர் சண்டையிட்டு மடிகிறார்கள். என்னைப் பொருத்த வரை எல்லையில் சண்டையிடும் ரானுவ வீரன் ஒரு அடிமையே. சண்டையிடு என்றால் சண்டையிடவும், சும்மா இரு என்றால் சும்மா இருக்கவும் வேண்டும். அவனுக்கு கொஞ்சம் சம்பளமும். அதிகமாக நாட்டுப்பற்று என்னும் போதையையும் கொடுக்கிறார்கள். சண்டையில் சாகும் வேற்று நாட்டு வீரனுக்காக நாம் கவலைப் படுவதில்லையா? ஆனால் இங்கே சண்டையிட்டு செத்தவர்கள் யார்? அப்பாவி பொது மக்கள். சிறு குழந்தைகள் இந்த பின்னூட்டத்தை என்னால் எழுத முடியவில்லை . மனதில் அந்த பிஞ்சுகளின் ரனத்தை நான் சுமக்கிறேன். இதை எல்லாம் நம்மால் தடுக்க முடியவில்லையே என்று மனம் பதறுகிறது. எந்திரன் பின்னால் சென்றவர்களில் ஒரு பத்து சதம் பேர் கூட ஒன்று சேரவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. இங்கே நாம் நம்மை வருங்கால வல்லரசு என்று சொல்லிக் கொள்கிறோம். கூட்டனியின் தலைவன் என்று கருனா(கருனாநிதி) நம்மை எல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருந்தார். எனவே காங்கிரஸ் மட்டும் அல்ல நம் இலக்கு. தி மு காவும் (அடிப்படையில் நான் ஒரு திமுக அனுதாபி) நாம் இம்முறை எல்லா தொகுதியிலும் ஒரு சுயேச்சையை வெல்ல வைப்போம்.