பெயர் : கலைஞர்
இயற்பெயர் : திருக்குவளை முத்துவேல் கருணாநிதி
தலைவர் : தி.மு.க
துணை தலைவர் : மு.க.ஸ்டாலின்
மேலும் துணை தலைவர்கள் : மு.க.அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, தமிழரசு, உதயநிதி, துரை தயாநிதி, கயல்விழி, மற்றும் மாறன் சகோதரர்கள்
வயது : ஓய்வு பெரும் வயதல்ல
தொழில் : முழு நேர அரசியல், பகுதி நேர இலக்கியம், சினிமா, பாராட்டு விழாக்கள், நானும் பத்திரிகையாளன்
பலம் : தயாளு அம்மாள் ( தன் வீட்டிற்கு வரும் சாதாரண தொண்டனையும், மூத்த அமைச்சரையும் ஒரே மாதிரி அன்பு பாராட்டி உபசரிக்கும் குணம்), மற்றும் தொண்டர்கள்.
பலவீனம் : குடும்ப மொத்தமும் அரசியலிலும், சமீபமாக மீடியாவிலும் ஆதிக்கம் செலுத்துவது.
நீண்ட கால சாதனைகள்: அயராத உழைப்பு, பிடிக்காவிட்டாலும் அனைவரும் மதிக்கும் இலக்கியவாதி, ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு
நல்ல கட்டடங்களை உருவாக்குவது. ஒரு ரூபாய்க்கு அரிசி.
சமீபத்திய சாதனைகள் : காசு கொடுத்தால் ஒட்டு விழும், சோனியாவை சரிக்கட்டியது, கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற யாரையும் வரவிடாமல்
பார்த்துகொள்வது, வைகோவை தனி ஆளாக்கியது, மற்றும் பல
நீண்ட கால எரிச்சல் : கட்சியில் பதவி போட்டி, முன்பு எம்.ஜி.ஆர். , வைகோ, தற்போது அழகிரி
சமீபத்திய எரிச்சல் : உலக தமிழர்களின் தலைவராக பிரபாகரன் மாறிவிட்டது
மக்கள் : இந்த மக்கள் இன்னுமா நம்பள நம்புறாங்க...
சொத்து மதிப்பு : கணக்கு போட முடியலீங்க
நண்பர்கள் : காங்கிரஸ்காரர்கள் அல்ல (சோனியா தவிர), சினிமாக்காரர்கள்( அஜித் தவிர)
எதிரிகள் : அப்படி சொல்லிகொண்டவர்கள் கொடநாட்டுக்கு போய்விட்டனர், தற்சமயம் பதிவர்கள் ( லக்கிலுக் தவிர), ஈழம் பற்றி இன்னமும் பேசுபவர்கள். ஞாநி
ஆசை : முதல்வராக இருக்கும்போது இறந்து போவது
நிராசை : கடற்கரையில் சமாதி கட்ட முடியாமல் போனது
பாராட்டுக்குரியது : சமத்துவபுரத்தை வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்தது
பயம் : மாறன் சகோதரர்களை பார்த்து
கோபம் : பாராட்டு விழாவில் குறை சொல்வது
காணமல் போனவை : பகுத்தறிவு பேசுதல், பெரியாரை வீரமணியிடம் விட்டுவிட்டது, நூலகங்களை கண்டு கொள்ளாமல்விட்டது,
புதியவை : மஞ்சள் துண்டு, கலைஞர் தொலைக்கட்சிகள், சினிமா தாயாரிப்புகள்,
விநியோகம்
கருத்து : முன்னெல்லாம் தைரியமாக விமர்சனம் செய்யலாம், இவரைவிட நல்ல
தலைவர் இப்போது நம்மிடம் இல்லை, அயராத உழைப்பாளி.
டிஸ்கி : இதை எழுதிய எனக்கு ஆட்டோ வந்தால் நான் பிரபலம் ஆவேன், பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஆட்டோ வந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது.
11 கருத்துகள்:
அருமையான கண்ணோட்டம்.
தல BOLD TAG ஐ உபயோகம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி தல...
சொல்லிட்டீங்கல்ல உடனே இணைச்சுடறேன்
சாருக்கு ஒரு ஆட்டோ பார்சல்...
மக்கள் : இந்த மக்கள் இன்னுமா நம்பள நம்புறாங்க...
//////
அருமை .....
உலவின் வருகைக்கு நன்றி
செந்தில் நல்லா சொன்னீங்க, வெளிச்சம் போட்டுக்காட்டுங்க எங்கட (மக்கா) மக்களுக்கு. இந்த மக்கள் இன்னுமா நம்பள நம்புறாங்க... சூப்பர்...
வருகைக்கு நன்றி thirus
தம்பி ஆட்டோவென்ன சைக்கிள் அனுப்புற அளவுக்கு கூட நீ ஒர்த் இல்லை
"தம்பி ஆட்டோவென்ன சைக்கிள் அனுப்புற அளவுக்கு கூட நீ ஒர்த் இல்லை"
ஐயா உங்களால பிரபலம் ஆகலாம்ன்னு பாத்தா
சைக்கிள்கூட அனுப்ப முடியாதுன்னா எப்பிடி,
இருங்க பயோடட்டா -2 ல பார்க்கிறேன் ...
"சமீபத்திய எரிச்சல் : உலக தமிழர்களின் தலைவராக பிரபாகரன் மாறிவிட்டது..."
அதே...அதே...
MR.Kalaigner Karunanidhi is the only one leader is spreading late E.V.R.Periar's messages.Because of Kalaiger most backward caste people
got education and at present they are working in software fields hospitals, colleges and other fields.We have to appreciate his
talents in most of the fields.
Vellakal Kandasamy Thirunavukkarasu
கருத்துரையிடுக