18 ஏப்., 2010

கணிப்பாளன் வாழ்க்கை

பெருங்கடலின் மணற்பரப்பில் 
பெரும்பாலும்
காதல் கணிக்கும் 
கிளி  ஜோசியனுக்கு
கிடைப்பதில்லை சீரான வருவாய்..



வார நாட்களில்
வெயில் வேளைகளில்
கடலை போடும் காதலையும்
காவலர்கள் கலைப்பதால்
தினத்தந்திக்கும், டீக்குமே
கிடைக்கும் காசு போதவில்லை...

எல்லோருக்கும்
எதிர்காலம் கணிக்கும்
ஜோசியனுக்கும், கிளிக்கும்
நிச்சயமில்லை நிகழ்காலம்...