28 ஏப்., 2010

ஒன்றைப் பகிர்தல்

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம்
மகிழ்ச்சியை,
வருத்தங்களை, 
கோப்பைகளை 
அவைகளில் பேதங்கள் 
அறியப்படவில்லை 
நீ பகிர்ந்த ஒன்றை 
ஒருமுறை 
நானும் பகிரும் வரை ...

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம் 
நம் புரிதல்களை,
அவற்றின் சில பக்கங்களை 
அருவெறுப்பு என 
நம்மை 
பிடிக்காதவர்களிடம் ...

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம் 
நாம் 
பகிர்ந்து கொண்ட ஒன்றை 
வேறொன்று 
பகிர்ந்ததை அறிந்து 
அது 
நாங்களும் பகிர்ந்ததென ...

நாம் நிறைய பகிர்ந்து 
கொண்டோம் 
வருத்தங்களை 
சந்தோசங்களை 
கோப்பைகளை 
அந்த ஒன்றையும் ....
அதன்பின் 
ஒவ்வொன்றையும் ....

6 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மதுரை சரவணன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிறைய பகிர்ந்து கொண்டீர்கள் ஓகே.

ஆனால் பீர், quater, Votka, சாராயம் இதெல்லாம் எங்களோட பகிர்ந்து கொண்டீர்களா?

Unknown சொன்னது…

//ஆனால் பீர், quater, Votka, சாராயம் இதெல்லாம் எங்களோட பகிர்ந்து கொண்டீர்களா//

எல்லாமும்தான் நண்பா ...!

pichaikaaran சொன்னது…

நாய் கவிதை மாதிரி, ஒரு கிளு கிளுப்பு இல்லை.. ஹி ஹி ...

சும்மா ஜோக்... நல்லா இருக்கு,,, பகிர்தல் என்பதன் ஆழமான அர்த்தத்தை சரியாக உபயோகித்து இருக்கிறீர்கள்... ஒருவளை, உங்களையும் மீறி ஆழமான அர்த்தம் வந்து இருக்க கூடும்...

Unknown சொன்னது…

//நாய் கவிதை மாதிரி, ஒரு கிளு கிளுப்பு இல்லை.. ஹி ஹி ..//

அடுத்த கவிதையில் பார்க்கலாம், நன்றி பார்வையாளன்