23 ஏப்., 2010

மழை பெய்த நாட்கள் ...

நீ யாரோ
நானும் யாரோ...

நீ எனக்கு  முதல் பெண் அல்ல,
நானும் உனக்கு  முதல் ஆண் அல்ல,.


நீ என்னையும்,
நான் உன்னையும் ஒரு சந்தர்ப்பத்தில்
பார்க்க ஆரம்பித்தோம்.

நீயும்,
நானும்
சில சந்திப்புகளை உருவாக்கினோம்.

நீ எனக்காகவும்,
நான் உனக்காகவும்
சிலவற்றை மாற்றிக்கொண்டோம்
சிலவற்றை மாற்றிகொண்டது மாதிரி
நடித்தோம்.

நீ என்னை மிகவும் நேசித்தாய்
நானும் அப்படிதான்.,
உயிருக்கு உயிராக என்று வைத்துகொள்ளலாம்..

நீ
பேச,
சாப்பிட,
உடுத்த,
பரிசளிக்க
நான்தான் செலவு செய்தேன்.

நீ சில காரணங்களை சொன்னாய்
நானும் சொன்னேன்.

நீ அடிக்கடி கோபப்பட்டாய்..
நான் விலகி செல்ல ஆரம்பித்தேன்.

நீ யாரையோ திருமணம் செய்துகொண்டாய்,
நானும் ஒருத்தியுடன் வாழ்கிறேன்.

இப்போதும் நான்
உன்னைப்பற்றி நினைப்பதுண்டு..!
நீ.....?

5 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கவிதை அருமை. சாரி வினவு பத்தி எனக்கு தெரியாததினால நோ கமெண்ட்ஸ்

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்

vinthaimanithan சொன்னது…

எனக்கு ஏதோ இடிக்குதுங்க்ண்ணோவ்...

சரி சரி .... ஜூப்பராகீது

Unknown சொன்னது…

எனக்கு ஏதோ இடிக்குதுங்க்ண்ணோவ்...

என் சொந்த அனுபவம் இல்ல தம்பி

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில் - அருமையான கவிதை - ஒரு நிகழ்வினை அப்படியே கவிதை ஆக்கியமை நன்று. மணமான பின்பும் முன்னாள் காதலியை நினைப்பது பொதுவாக ஆண்கள் குணம்- பெண்கள் அப்படியல்ல- மறந்து விடுவார்கள். நல்வாழ்த்துகள் செந்தில் - நட்புடன் சீனா