28 ஏப்., 2010

கேரளா கபே - பார்க்க வேண்டியபடம்இந்தப்படத்தை ரஞ்சித் தயாரித்து, இயக்கியுள்ளார் , மொத்தம் பத்து கதைகள், பத்து இயக்குனர்கள் மொத்த கதைகளும் சுஜாதாவின் சிறுகதைகளை படித்த மாதிரி இருக்கும், அதில் நான்கு நம்ம யூத் கேபிளின் நிதர்சனக் கதைகள் மாதிரி இருக்கும்.

நாஷ்ட்டல்ஜியா - துபாயின் ஒரு அடுக்காக வீட்டில் ஊருக்கு கிளம்புமுன் நண்பர்களுக்கு அளிக்கும் மது விருந்துடன் ஆரம்பிக்கும், திலிப் ஊருக்கு குடும்பத்துடன் வந்து தன் பூர்விக வீட்டை விற்று பெற்றோர்களை காப்பகத்தில் விட்டுவிட்டு, மீண்டும் ஊருக்கு வரும்வரை உதவும் தன் நண்பன் கேட்கும் மூன்று இலட்சத்தையும் அவருடைய வங்கி கணக்கு அனுப்புவதாக சொல்லிவிட்டு செல்வார், அதன் பிறகு வருபவை அக்மார்க் வெளிநாட்டுகாரன் காமெடி, நவ்யா நாயர் உடன் நடித்திருப்பார், நடுவழிகள் எனும் கவிதையை தழுவி எடுக்கப்பட்ட கதை.,இயக்கம் :பத்மகுமார், ஒளிபதிவு :அணில் நாயர்
  
ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் - இதில் பிரித்விராஜ் பேசும் ஆரம்ப வசனங்கள் நன்றாக இருக்கும், மேலும் ரகுமான் பற்றிய காட்சி அமைப்பு கவிதை, ஒரு கடந்த கால ரயில் விபத்தில் தன் உறவுகளை இழந்த அனைவரையும் தனித்தனியான கோணத்தில் படம் பிடித்து இருப்பார்கள். கீது கிறிஸ்டி பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார்.
இயக்கம்& எழுத்து : சங்கர் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு : குமார் 

லலிதம் ஹிரன்மயம் - முக்கோண காதல் கதை, சுரேஷ் கோபி, ஜோதிர் மயி, தன்யா மூவரும் நடித்திருக்கின்றனர், வசனங்களும், காட்சி அமைப்பும் அருமை, 
எழுத்து: ராஜேஷ் ஜெயராமன், இயக்கம்: சாஜி கைலாஷ் ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ் 

ம்ரிடியுன்ஜயம் - அற்புதமான த்ரில்லர், தன் முதல் சந்திப்பிலேயே தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா? எனக்கேட்பதும் அதற்க்கு அவள் உன்னால் எப்படி கேட்கமுடிந்தது என விருப்ப பார்வையுடன் அவனை கேள்விகளால் துளைப்பது இதை ஒரு தனிபடமாகவே எடுக்கலாம். திலகனை தவிர மற்றவர்களை தெரியவில்லை. இந்த குழுவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
கதை:அகமத் சித்திக் இயக்கம்: உதய் அனந்தன் ஒளிப்பதிவு: ஹரி நாயர் 

ஹாப்பி ஜர்னி - ஜெகதி ஸ்ரீகுமார் ஒரு சபல ஆசாமி, ஒரு பேருந்து பயணத்தில் இவரின் பக்கத்து இருக்கையில் மாட்டிகொள்ளும் பெண் இவரை சமாளிக்கும் விதம் அருமை, ஒரு த்ரில்லரை போல் நகர்ந்தாலும் நல்ல கதை. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜகதி நடந்துகொவது சிரிப்பை வரவழைக்கும்.
கதையும் இயக்கமும்: அஞ்சலி மேனன், ஒளிப்பதிவு:ராதா கிருஷ்ணன் அவிராமம்: சித்திக், ஸ்வேதா மேனன் இருவரும் நடித்திருக்கின்றனர், கடன் தொல்லையால் அவதிப்படும் சித்திக் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுப்பார். முடிவு நல்ல திருப்பம். ஒரு அழகான குடும்பம் சிதறிவிடபோகிறதே எனும் பதட்டம் நமக்குள் வரும்.
கதையும் இயக்கமும்: உன்னிகிருஷ்ணன் ஒளிப்பதிவு: ஷம்டட்.

ஆப் சீசன் - காமேடிக்கதை, ஆனால் ஒரு போர்த்துகீசிய தம்பதியர்களை வைத்து பின்னியிருப்பார்கள். நல்ல திரைகதை.
கதை: ஜோஸ்வா நியுட்டன் இயக்கம்:சியாம் பிரசாத் ஒளிப்பதிவு: அழகப்பன்.

பிரிட்ஜ் - நெஞ்சை உருக வைக்கும்  கதை, தாயை இழந்த சிறுவன் பூனைகுட்டியிமேல் அன்பு, காட்டுவதும். தாயை பராமரிக்க முடியாமல் நகரத்தில் ஒரு திரைஅரங்கில் விட்டுவிட்டு வரும் ஒரு மகனின் போராட்டமும் அற்புதமான சித்தரிப்பு. முடிவு நம்மை வெகு ஆழத்திற்கு இட்டுசெல்லும் 
கதை: உன்னி இயக்கம்: அன்வர் ரசீத் ஒளிப்பதிவு: சுரேஷ் ராஜன் 


மகள் - இது இன்னொரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதை, வறுமைக்காக தத்து கொடுப்பதாக விற்ற பெண் எங்கு போகிறாள் எனும் முடிவு நம்மை பதறசெய்யும். கதையின் துவக்கமே ஒரு சிறுவனை பார்த்து யாரு பாண்டி புதுசா எனகேட்பதில் ஆரம்பிக்கும், வறுமையால் தென் தமிழக குழந்தைகள் எப்படி சீரழிகிறார்கள் எனகாட்டியுள்ளனர்.
கதை:தீதி தாமோதரன் இயக்கம்:ரேவதி ஒளிப்பதிவு:மது அம்பாட்

புறம் கழச்சல் - நேர்த்தியான திரைகதை, ஒளிப்பதிவு, இயக்கம்,நடிப்பு என எல்லாம் சம பங்கு இருக்கும் படம், சீனிவாசனும், மம்மூட்டியும் நடித்திருப்பார்கள். நேர்த்தியான முடிவு 
கதை:ஸ்ரீராமன் இயக்கம்:லால் ஜோஸ் ஒளிப்பதிவு: விஜய் உலகநாதன் 

ஆரம்ப காலத்தில் நல்ல படங்களை மட்டுமே தந்த மலையாள படவுலகினர், இடையில் மசாலா படங்களுக்குள் மாட்டிகொண்டனர், ஆனால் இது போன்ற அவர்களின் முயற்சிகள் மீண்டும் நல்ல படங்களை தரும் என நம்புவோம். எனக்கு மலையாளம் தெரியாது. அதனால் என்ன நல்ல படைப்புகளுக்கு மொழி தேவையில்லை என்பதே எனது கருத்து.

7 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருமையான விமர்சனம் உடனே படம் பாக்கனும்னு போல தோணுது.

Unknown சொன்னது…

// உடனே படம் பாக்கனும்னு போல தோணுது//

பாருங்க ரமேஷ்

சென்ஷி சொன்னது…

அருமையான தொகுப்பாயிருக்கும் போல. பகிர்விற்கு நன்றிங்க

Unknown சொன்னது…

ஆமாம் சென்ஷி அவசியம் பாருங்கள்

CS. Mohan Kumar சொன்னது…

நல்ல விமர்சனம் செந்தில் நன்றி

Unknown சொன்னது…

நன்றி மோகன் குமார்

ராஜ நடராஜன் சொன்னது…

நீங்கதான் கேரளா கபே எனக்கு அறிமுகப்படுத்திய ஆளா?நல்ல வேளை கண்ணுல மாட்டுனீங்க.நேற்று இரவு பார்த்த கேரள கபே பட அறிமுகத்துக்கு நன்றி,இல்லன்னா புரியாம மலையாள மசாலா பார்ப்பதை விட தமிழ் மசாலாவே பார்க்கலாமேங்கிற வைராக்கியம் தொடர்ந்திருக்கும்.

கதை ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் சேர்ந்ததுங்கிறது நீங்க சொல்லித்தான் தெரியுது.இதில் என்னை கவர்ந்தது நாஷ்ட்டல்ஜியா,ஹேப்பி ஜர்னி,பிரிட்ஜ்,மகள்,புறம் கழச்சல்.

நாஷ்ட்டல்ஜியா வளைகுடா கோணமென்பதால்

ஹேப்பி ஜர்னி பயணத்தின் தமிழ்ப்புலி என்ற மலையாள உள்குத்து சொல்லுக்காக,மற்றபடி ஒன்று அந்தப் பெண் இருக்கை தரும் இருட்டு வசதியில் மடங்கியிருப்பாள் அல்லது பயணத்தில் பெரும் கலவரம் நடந்திருக்கும் இயல்பாக.

பிரிட்ஜ் மகனால் திரையரங்கில் தனித்து விடப்பட்ட வயதான அம்மாவும்,பூனையும் இணையும் விதத்தின் சோகத்திற்காக

மகள் தத்து என்ற பெயரால் பெண்குழந்தை விலை போகும் தமிழக யதார்த்தம்

புறம் கழச்சல் பஸ் ஒவ்வொரு இடத்திலும் 5 நிமிடம் சாயா,புகைப்படம் எடுத்தல் என்று தாமதவாவதிலும்,இளைஞர்களின் பட்டாளத்தின் டாடி மம்மி வீட்டிலில்லை என்ற பாட்டின் பயணிகளின் கொண்டாட்டத்துக்கும், மம்முட்டியின் சிடுசிடுப்பு நமக்கும் துவக்கத்தில் கோபம் தூண்ட இறுதியாக சாவு வீட்டுக்கு அவர் போவதின் மன மின் மருத்துவத்துக்கும் (shock treatment).

சின்ன கதைகளை ஒரு முழுத்திரைப்படமாக்க கொண்டு வந்து கேரள கபேயில் இணைத்த முயற்சிக்கு பாராட்டவே வேண்டும்.

இந்த மாதிரி கேரள திரைப்படத்துறை தனது பழைய இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப வாழ்த்துவோம்.