17 ஏப்., 2010

சிறகு

பறவையின் மொழிகேட்பவனிடம்
எதிர்காலம் அறியசென்றேன்
அறைக்கு வெளியேவந்து
அட்டைகளை கலைத்த
பறவை
கணிக்க இயலா தருணமொன்றில்
விருட்டென பறந்துவிட்டது...


பிடிக்க முடியாத வெறுப்புடன்
ரெக்கை வெட்டி நாளாச்சு
இன்னொன்னுதான் வாங்கனுமென்றான்
அவன்..

மனக்கதவை திறந்து
உள்ளிருக்கும் சிறகுகளை
ஒவ்வொன்றாய் எடுத்து
பொருத்திக்கொள்ள துவங்கினேன்
நான்...

7 கருத்துகள்:

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

Unknown சொன்னது…

நன்றி வேலு,
உங்கள் கவிதைகள் அருமை ..

pichaikaaran சொன்னது…

விழிப்புணர்வுடன் நாம் இருந்தால், எதன் மூலமும் நமக்கான கதவு திறக்க கூடும்....

ஷார்ட் அண்ட் ஸ்வீட் கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லாயிருக்கு

க.பாலாசி சொன்னது…

கவிதை முதல் பத்தி மிக அருமை...

நலலாருக்குங்க நண்பரே... தொடருங்கள்..

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி TVR ஐயா..
மிகவும் நன்றி பாலாசி....

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி பார்வையாளன்