30 ஏப்., 2010

எங்கே போகிறது இந்தியா?


பழங்கால இந்தியாவை விட்டுவிடுவோம், அங்கிருந்து ஆரம்பிக்க இது வரலாற்று கட்டுரை இல்லை..

சமீப காலமாக வரும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் என்னை வெகுவாக பாதித்துக் கொண்டிருக்கிறது , முன்னெல்லாம் இடம்பெறும் கைதுகள் சில லச்சங்களுடன் இருக்கும்,இப்போது ஒரு கைதில் கைப்பற்றிய தொகை மட்டும் ரூபாய் ஆயிரத்து எண்ணூறு கோடி, அதற்கும் முன்பு பேசப்பட்ட ஐ.பி.எல் ஊழல் இன்னும் நீள்கிறது, சாதாரண அடித்தட்டு , மற்றும் நடுத்தர மக்கள் அம்பதுக்கும், நூறுக்கும் அல்லல்பட விலைவாசிகளும் உச்சத்துக்கு போய் வாழ்வே கேலிப்பொருளாக மாறிப்போன நிலையில், இத்தனை ஆயிரம் கோடி சில தனி மனிதர்களிடம் சென்று சேர்ந்துள்ளதை அறிகையில் வெறுப்பாகத்தான் இருக்கிறது.

எப்ப நம்ம தொகுதி எம்.எல்.ஏ சாவான் என எதிர்பார்க்கும் கூட்டமாய் மாறிப்போன நமக்கு,  நம் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என நினைக்கையில் பெரும் கவலை அளிக்கிறது. மத்திய அரசாங்கம் விலைவாசி உயர்வை பற்றியும், நக்சலைட்டுகளையும் பற்றி பேசாமல் சசிதரூர் , லலித்மோடிக்கும் உள்ள பிரச்சினைகளை பெரிது பண்ணுவதில் குறியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் அமேரிக்கா என்ன சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டும் பிரதமர், காலடியில் ஈழத்தில் வந்து அமர்ந்து விட்டான் சீனன், மீன் பிடிக்க போனவன் பிணமாய் வருகிறான், அவர் மீன் பிடிக்கும் உரிமையை கூட தனியாருக்கு விற்க முயற்சி செய்யும் மத்திய அரசு.

மாநிலத்தில் மகன்களுக்கு பதவிகளை பிரித்து கொடுப்பதிலும் , வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தும் பெரியவர், சினிமாகாரர்களை வாழவைக்க செலவிடும் தொகையில் ஒரு பகுதியை தன் சொந்த வருமானத்தில் இருந்து கொடுக்கவேண்டியதுதானே. எல்லாம் யார் வீட்டு சொத்து, சினிமா தொழிலாளர்கள்  போலவே எத்தனையோ ஏழை ஆட்டோ ஓட்டுனர்களும், ரிக்சா இழுப்பவர்களும், தெருவோர வாழ்க்கை வாழ்வோரும், விவசாய கூலிகளும் உள்ளனர். அவர்களுக்கு வந்ததெல்லாம் இலவச தொலைக்கட்சிதான், வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.

மக்களை சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை அடியோடு ஒழிக்காமல் வேடிக்கைபார்க்கும் பிரணாப் , ஒரு நாளைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து, தெருவோர உணவகத்தில் சாப்பிட்டு , ரேஷன் கடை கியூவில் நின்று இரவு மின்வெட்டில் தூங்கினால் தெரியும், இங்கு ஒவ்வொரு மக்களும் படும் சிரமத்தை. சின்ன மொதலாளி ராகுல் காந்தி சாப்பிட்டு போட்டோ எடுதுக்கிறாரே அது மாதிரி இல்லை, நிஜமாவே ஒரு நாளைக்கு சாதாரண மக்களை போல் வாழ்ந்து பாருங்க.

அப்புறம் மக்களே நமக்கு இருக்கவே இருக்கு, தாத்தா, பேரன்களின் மற்றும் சகோதரி, கேப்டன் இன்னபிற தொலைக்கட்சிகள் சீரியலுக்கு அழுதுவிட்டு, ஆட்டத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வேலை முடிந்து வந்தவனும் செல்லமே பாத்துவிட்டு , பிள்ளைகளுக்கு கிடைக்குது வகை வகையாய் ஜன்க் புட் ,  வாங்கி கொடுத்தா கிடைக்கும் ஆசுபத்திரி செலவுக்கு காப்பீட்டு திட்டங்கள் இருக்க, நமக்கென்ன  ....... போச்சு. எல்லாருக்கும் உள்ளதுதானே நமக்கும்.

போங்க புள்ளை குட்டிகளை படிக்க வைங்கன்னு சொல்ல முடியாது , ஏன்னா அது விக்கிரமதித்யன் வேதாளத்த பிடிக்கிற கதை,  எல்.கே.ஜி க்கு அப்புறம் ஐ.ஏ.எஸ் போறமாதிரி எது புள்ளைகளை உருப்புடாம அடிக்குமோ அதுல பெருமைக்கு சேத்துவிட்டு அதுக்கு கட்ட வட்டிக்கு வாங்கி, கொடுத்தவனுக்கு பயந்து அறைக்குள் புலம்பும் ஆட்கள் நாம்.

இப்படியே போனா மொத்தமா அமெரிக்கவோ, சீனாவோ நம்மளை குத்தகைக்கு எடுத்து எல்லாத்துக்கும் காசு கேப்பானுவோ, அப்ப நம்ம சிங்குகளும், பேரன்களும், சோனியா, சிதம்பர வகையறாக்கள் பகுதி குத்தகை வசூலிப்பார்கள். சொல்றத சொல்லிட்டேன்.

இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//

மக்களே ஒரு ஒசிகுடி இருப்பதால் அடுத்த பதிவில் சந்திக்கலாம். வரட்டா????.

17 கருத்துகள்:

Chitra சொன்னது…

இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//

மக்களே ஒரு ஒசிகுடி இருப்பதால் அடுத்த பதிவில் சந்திக்கலாம். வரட்டா????.



........ உள் குத்து பலமா இருக்கே..... வித்தியாசமா யோசித்து எழுதி இருக்கீங்க. :-)

Unknown சொன்னது…

//........ உள் குத்து பலமா இருக்கே..... வித்தியாசமா யோசித்து எழுதி இருக்கீங்க. :-)//

ரொம்ப நன்றிங்க .. யாருமே கமென்ட் போடலியே ?
ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் .....

ராஜ நடராஜன் சொன்னது…

//ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் ..... //

உங்க கடை என்ன முக்கு சந்துல இருக்குதா:)

நான் ரொம்ப நாளா கவனிச்சு வருவது துணிந்து அரசியல் சார்ந்த விசயங்களை சொல்லிட்டா உள்ளேன் ஐயா சொல்றதுக்கு கொஞ்சம் நண்பர்கள் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

டீ குடிக்க வரலைன்னாலும் கடைய திறந்து வையுங்க.அப்படியே நீங்களும் ஒரு ஓசிகுடி:)

Unknown சொன்னது…

//டீ குடிக்க வரலைன்னாலும் கடைய திறந்து வையுங்க//

பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இருக்காங்க ...

ராஜ நடராஜன் சொன்னது…

//மாநிலத்தில் மகன்களுக்கு பதவிகளை பிரித்து கொடுப்பதிலும் , வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தும் பெரியவர், சினிமாகாரர்களை வாழவைக்க செலவிடும் தொகையில் ஒரு பகுதியை தன் சொந்த வருமானத்தில் இருந்து கொடுக்கவேண்டியதுதானே. எல்லாம் யார் வீட்டு சொத்து, சினிமா தொழிலாளர்கள் போலவே எத்தனையோ ஏழை ஆட்டோ ஓட்டுனர்களும், ரிக்சா இழுப்பவர்களும், தெருவோர வாழ்க்கை வாழ்வோரும், விவசாய கூலிகளும் உள்ளனர். அவர்களுக்கு வந்ததெல்லாம் இலவச தொலைக்கட்சிதான், வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.//

அவருதான் நீங்க சைக்கிள் அனுப்ப கூட லாயக்கில்லாத கேசுங்கிறராரே?அப்புறமென்ன அவரையே போய் நொச்சு நொச்சுன்னுட்டு.

சொர்க்கமே என்றாலும் தமிழ்நாடு டாஸ்மாக் போல வருமா?

Unknown சொன்னது…

//அவருதான் நீங்க சைக்கிள் அனுப்ப கூட லாயக்கில்லாத கேசுங்கிறராரே?அப்புறமென்ன அவரையே போய் நொச்சு நொச்சுன்னுட்டு.//

அந்த தைரியத்துலதான்!

//சொர்க்கமே என்றாலும் தமிழ்நாடு டாஸ்மாக் போல வருமா?//

வரவே வராது தல !!

vinthaimanithan சொன்னது…

ஹர்ஷத் மேத்தாவோட மூவாயிரம் கோடிய மறந்துட்டுட்டீங்களே!!!

அப்புறம் தீவனம் வித்ததுல 900 கோடி!!

திராட்சைப்பழம் வித்ததுல வந்த சிலநூறு கோடி!!!

//வரும் வருமானத்தில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கலைஞர் தொலைக்கட்சியில் மானாட மயிலாட பார்த்துவிட்டு குப்புற அடித்து தூக்கம்தான்.//

அப்புறம் எப்படி மக்கள்தொகை பெருகும்??? ஒண்ணும் புரியலயே???!!!

நாடு நாசமாப் போறதுல அரசியல்வாதிகளுக்கு எவ்ளோ பங்கு இருக்கோ அதே அளவுக்கு சுயநலத்தின் கூடாரமாய்ப் போய்விட்ட நடுத்தரவர்க்கத்துக்கும் உண்டு


//நான் ரொம்ப நாளா கவனிச்சு வருவது துணிந்து அரசியல் சார்ந்த விசயங்களை சொல்லிட்டா உள்ளேன் ஐயா சொல்றதுக்கு கொஞ்சம் நண்பர்கள் பயப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
//
நினைக்காதீங்க அதான் உண்மை... சமீபத்துல ஒரு ‘பெரபல பின்நவீன கவிஞ்சர்’ என்னிடம் தனியாய் சாட்டிங்கில் தான் ஏன் என்னுடைய ‘இங்கே பிராமணன்’ பதிவுக்கு பின்னூட்டமிடவில்லை என்பதற்கு இந்தக் காரணத்தைச் சொன்னார்.

//பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இருக்காங்க ..//

இங்க என்ன பிரச்சினைன்னா எல்லாரும் டீக்கடை நடத்துறவங்கதான். அவங்க கடையில போயி நாம் ஒரு டீ குடிச்சா... பதில்மரியாதைக்கு நம்ம கடைக்கு
வந்து ஒரு டீ குடிப்பாங்க

//அந்த தைரியத்துலதான்!//

ரொம்பத்தான்... அம்மா மட்டும் வரட்டும்... சாய்பாபா அந்தரத்துல ஜுஜூபி லிங்கமும், மோதிரமும் மட்டும்தான் எடுப்பாரு... நாங்க ஒண்ணுமில்லாத வீட்டுக்குள்ள இருந்து கஞ்சாவே எடுப்போம்

vinthaimanithan சொன்னது…

அண்ணே மன்னிச்சிடுங்க தமிழ்மணத்துல தவறுதலா மைனஸ் ஓட்டு போட்டு தொலச்சிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி. போய் ஒசிகுடிய முடிச்சுட்டு எனக்கும் பார்சல் எடுத்துட்டு வாங்க...

ஜெய்லானி சொன்னது…

//பரவாயில்லை நம்ம ஆத்துற டீக்கு ரெண்டு கஸ்டமர் இருக்காங்க ..//

டீக்கு மட்டுமா ?

AkashSankar சொன்னது…

நிதர்சனம்...கடைசி இரண்டு வரி superooo superrr....

Unknown சொன்னது…

நன்றி..விந்தைமனிதன்

Bibiliobibuli சொன்னது…

>>>>இருங்க ஒரு அழைப்பு வருது :// ஹலோ // , //சொல்லு எந்த பாருக்கு//, //அப்படியா இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன்//>>>


>>>ஆள் இல்லாத கடையில டீ ஆத்துரோமொன்னு நெனச்சேன் .....>>>

தமிழ்மணத்தில் நின்றிருந்தேன். நீங்க ஆத்தின ரீ வாசம் வந்திச்சு. அதான் உங்க கடைக்கு வந்தேன். அப்புறமா, நீங்கள் எழுதிய இந்த இரு வரிகளுக்கும் யாருமில்லாமல் தனியே விழுந்து, விழுந்து சிரிச்சேன். சிரிச்சு முடிச்சபின் தமிழனாய் பிறந்த பாவத்தை கோடிப்பேரில் ஒருவராய் நொந்துகொண்டேன்.

Unknown சொன்னது…

நன்றி....

ரமேஷ்

ஜெய்லானி

ராசராசசோழன்

ரதி

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வித்யாசமான சிந்தனைகள்

பாரதி பரணி சொன்னது…

மெய் பொருள் காண்பது எளிது...கண்களையும், மனதையும் திறந்து இருந்தால்...இப்பதிவை தமிழ் தெரிந்த ஒரு அரசியல் வாதி படித்தாலும் ஒரு கணமாவது உணந்து பார்ப்பாரா என்பது சந்தேகமே...தொடருங்கள் உங்கள் சேவையை...

Unknown சொன்னது…

நன்றி

பாரதி பரணி

Starjan ( ஸ்டார்ஜன் )